Cinema : இப்போதுள்ள சினிமா துறையில் படம் எடுப்பது என்பதே மிகப்பெரிய கஷ்டம் என்றுதான் கூறவேண்டும். தொழில்நுடபமும் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது.
ஒரு படம் எடுத்து அது 100 நாட்கள் ஓடுவது என்பதே சந்தேகத்திற்குரியது. அந்த வகையில் தற்போது படம் போட்ட காசை விட லாபம் ஈட்டி தருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு நாளிலே அத்தனை படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டரில் தாக்கு பிடிப்பதும் கஷ்டம்.
மக்களின் மனது பொதுவாக அதிக பட்ஜெட் படங்களை எதிர்பார்ப்பது இல்லை. நல்ல கதைக்களத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் எதை வேண்டுமானால் செய்யுங்கள் ஆனால் பாமர மக்களுக்கு புரிய போவதென்பது படத்தின் கதை மட்டும்தான் என்ற வகையில் போய்க்கொண்டிருக்குறது.
கம்மி பட்ஜெட், கொழுத்த லாபம்..
அந்த வகையில் தற்போது குறைந்த பட்ஜெட்டில் 7 கோடிக்கு படம் எடுத்து, நல்ல கதையை மட்டுமே வைத்து ஒரு படம் லாபம் ஈட்டியுள்ளது. அதுவும் 1 மடங்கு, 2 மடங்கு இல்லை. 1300% லாபத்தை ஈட்டி தந்துள்ளது. 2025 இல் அதிக லாபத்தை ஈட்டியுள்ள இந்திய படமாகவும் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “Tourist family” படம்தான் இந்த சாதனையை செய்துள்ளது. இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார், நடிகை சிம்ரன், யோகிபாபு மற்றும் சிலர் நடித்திருப்பார்கள். இலங்கை அகதியை பற்றிய படம் matrum நல்ல கருத்தை மையமாக கொண்டு படம் அழகாக நகரும்.
இந்த படம் அனைவர் மனதிலும் நீங்க இடம் பெற்றுள்ளது. எத்ரதமான கதை, தேவையில்லாத பகுதிகள் ஏதும் இல்லை, சொல்ல கூடிய அளவில் பாடலும் இல்லை ஆனால் படம் மிகப்பெரிய ஹிட். இந்த படம் ஹிட் ஆனதுக்கு காரணம் நல்ல கதை மட்டுமே, பட்ஜெட்டும் கம்மி, கொழுத்த லாபம்.