Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் எது வேணாலும் பண்ணு. ஆனால் நான் தோற்கக்கூடாது தர்ஷன் கல்யாணம் நடக்க வேண்டும் என்று அறிவுடம் சொன்னதுக்காக அறிவு ரொம்ப ஓவராக தான் துள்ள ஆரம்பித்து விட்டார். அந்த வீட்டில் உள்ள பெண்களையே கீழே வரக்கூடாது சமையல் பண்ண கூடாது அடுப்பாங்கரைக்கு போக கூடாது என்று ஆர்டர் போட ஆரம்பித்து விட்டார்.
அதனால் நந்தினிக்கும் அறிவுக்கும் வாக்குவாதம் நடந்த பொழுது சக்தி வந்து தீர்த்து வைக்க பார்க்கிறார். ஆனால் சக்தியால் எதுவும் பண்ண முடியவில்லை. பிறகு ஜனனி வந்து அறிவுக்கரசியிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் மாடிக்கு வாங்க என்று கூட்டிட்டு போகிறார். போகும் பொழுது அங்கு இருந்த பார்கவியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அறிவு ரூமுக்குள் போகிறார்.
பின்னாடியே ஜனனி ஈஸ்வரி நந்தினி ரேணுகா என அனைவரும் ரூமுக்குள் போய் கதவை சாத்தி விடுகிறார்கள். கதவை சாத்தினதும் இதுதான் சான்ஸ் என்று ஜனனி, அறிவுக்கரசியை அடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலே ஏறி அடித்து பார்க்கவியை எப்படி அறிவு அடித்தாரோ அதே மாதிரி ஜனனி ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார். ஜனனி மட்டுமில்லாமல் ரேணுகா நந்தினி என அனைவரும் அடித்து விட்டார்கள்.
அடி வாங்கிக் கொண்டு போகும் பொழுது ஈஸ்வரியும் கன்னத்தில் பளார் என்று அடித்து விடுகிறார். பிறகு எதுவும் பேசாமல் அப்படியே கீழே உட்கார்ந்து விடுகிறார். அடுத்ததாக ரேணுகா ஜனனியை கூட்டிட்டு சாருபாலா பார்த்து பேசுவதற்காக ஆபீஸ்க்கு போகிறார். போனதும் ரேணுகா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எப்படியாவது ஞானத்தை வெளியே கூட்டிட்டு வந்து விடுங்க என்று கெஞ்சுகிறார்.
அதன்படி சாருபாலாவும் ரேணுகாவுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக முயற்சி பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ஜனனி, சக்தியை தனியாக பார்த்து ரொம்ப பீல் பண்ணி சக்தியின் அரவணைப்பை எதிர்பார்த்து பேசுகிறார். அந்த வகையில் சக்தியும் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஆறுதலாக பேசுகிறார். இதனைத் தொடர்ந்து சும்மாவே அறிவு ஓவராக ஆட்டம் ஆடுவார்.
இப்பொழுது அடிபட்ட பாம்பாக நிற்கும் பொழுது, குணசேகரன் வீட்டு பெண்களுக்கு டபுள் மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மொத்த வன்மத்தையும் காட்டுவதற்கு தயாராக போகிறார். அந்த வகையில் முதலில் ஞானத்தை டார்கெட் பண்ணி ஜெயிலில் இருக்கும் ஞானத்துக்கு ஹார்ட் அட்டாக் என்று கரிகாலன் மூலம் அறிவு தெரிந்து கொண்டார். அதனால் ஞானத்தை பலியாடாக சிக்கி ஒற்றுமையாக இருக்கும் பெண்களிடம் விரிசலை ஏற்படுத்தும் விதமாக காய் நகர்த்தப் போகிறார்.