Vetrimaaran : வெற்றிமாறனுக்கு என்று ஒரு தனி செல்வாக்கு தமிழ் சினிமாவில் இருக்கிறது. அவருடைய படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பெரிய ஹீரோக்களே காத்திருக்கின்றனர். இப்போது சிம்புவின் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
இந்த சூழலில் ஹர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள் படம் உருவாகி இருக்கிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தான் வர்ஷா பரத். பேட் கேர்ள் படத்தில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பேட் கேர்ள் படத்தின் டீசர் இரண்டு மாதத்திற்கு முன்பு யூடியூபில் வெளியானது. இதில் பள்ளி படிக்கும் மாணவி ஆண் நண்பர் வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மேலும் அவருடன் தவறான உறவில் இருக்கும் காட்சிகள், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை இடம்பெற்றிருக்கிறது.
வெற்றிமாறன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை
மேலும் தன்னை கண்டித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்தப் பெண் பெற்றோர்களை மிரட்டுவது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த டீசரால் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் கெட்டுப் போக அதிக வாய்ப்பு இருப்பதாக கண்டனங்கள் எழுந்தது.
மேலும் குழந்தைகளை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும்படி இந்த டீசர் இருப்பதால் உடனடியாக நீக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இப்போது இந்த டீசரை யூட்யூபில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பேட் கேர்ள் படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளதாக அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி இப்போது படம் வெளியாகுமா என்பதே சந்தேகம் தான்.