Surya : சினிமாத்துறையில் நடிக்கும் நடிகர்களுக்கிடையில் என்னதான் சினிமாத்துறையை தாண்டி நல்ல உறவு, நட்பு, பழக்கவழக்கம் இருந்தாலும். சினிமா என்று வந்தவுடன் நடிகர்களின் ரசிகர்களே சண்டை போட்டு பிரித்து விடுகிறார்கள்.
அது அப்படியே பின்பற்றி பெரிய பாகுபாடு கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த பிரச்சனை இன்று எழுந்தது அல்ல, எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு பிறகு ரஜினி, கமல் என்று ஆரம்பித்தார்கள் இதுபோல இன்று நிறைய நடிகர்களை ஒப்பிட்டு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இதுபோல தற்போது விஜய் மற்றும் சூர்யா அவர்களை ஒப்பிட்டு ஒரு தகவல்கள் பரவி வருகிறது. அதாவது விஜய் மற்றும் சூர்யா அவர்கள் சினிமா துறைக்கு நுழைந்த ஆரம்ப கட்டத்தில் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆஸ்கர் மூவிஸ் பாலாஜி பிரபு பகிர்ந்துள்ளார்.
அன்னைக்கு விஜய்க்கு மட்டும் கொடுத்தாங்க.. சூர்யாவை ஒரு பொருட்டாவே மதிக்கல
விஜய் மற்றும் சூர்யா இணைந்து நேருக்கு நேர், ஃப்ரண்ட்ஸ் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துள்ளனர். அப்போது நேருக்கு நேர் படத்தில் விஜய் மற்றும் சூர்யா படக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விஜய்க்கு மட்டும் Caravan கொடுத்தாங்களாம்.
சூர்யாவுக்கு கொடுக்கவில்லை, அவர் பாவம் டிரஸ் மாத்த கூட ரொம்ப கஷ்டப்பட்டார் என ஆஸ்கர் மூவிஸ் பாலாஜி பிரபு கூறியுள்ளார். இவர் எந்த நோக்கத்தில் கூறியுள்ளார் என்று தெரியவில்லை ஆனால் ஒருபக்கம் இயக்குனரின் மகன் விஜய், இன்னொரு பக்கம் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா.
அப்போ இருவருமே சரிக்கு சமமாக தராசு இருக்கக்கூடிய நடிகர்கள். ஆகவே யார் மேலேயும் இல்லை, யார் கீழேயும் இல்லை. எதற்காக இப்படி செய்தார்கள் என கூறிவிட முடியாது. ஒருவேளை வேறு ஏதாவது இக்கட்டான சூழ்நிலையாக கூட இருக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டது.