Ajith : சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் யார் என்று கேட்ட மக்களுக்கு, பல்வேறு ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து சாதித்துக்காட்டிய தல அஜித். சினிமாவின் உச்சத்தில் இருந்தாலும் தன்னடக்கத்தில் அவரை போல் யாரும் இல்லை.
அஜித் சினிமா துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், பைக் ரேசிங், கார் ரேசிங், டெக்னிக்கல் ஆர்வம் போன்ற துறைகளிலும் தன்னை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அஜித். எந்த வேலையாக இருந்தாலும் அதைப்பிடித்து செய்வது தான் அஜித்தின் குணம்.
தோத்துப்போன நேரம்..
இந்த வருடம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் நேரம் காலம் சரியில்லாமல் அஜித்துக்கு அந்த திரைப்படம் கைகொடுக்கவில்லை. எப்போதும் அஜித், த்ஷாவின் காம்போ மிகப்பெரிய வரவேற்பு தான் கொடுத்துள்ளது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளானது தான் மிச்சம்.
படத்தைப் பார்த்து ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வீட்டிற்கு ஏமாற்றத்துடன் தான் சென்றனர். இதன் பின்னர் புதுமுக இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம், எதிர்பாராதளவு ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது.
மீண்டும் கூட்டணி..
இந்த சமயத்தில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியுடன் அஜித் மீண்டும் ஒரு படம் எடுப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. தற்போது இதை உண்மையாகும் வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் வலைதளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
” அஜித் குமார் சாரின் Ak64 திரைப்படத்தை நான்தான் எடுக்கிறேன். மீண்டும் அஜித் சார் உடன் இணைந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். இது நிச்சயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்-ஆதிக் ரவிச்சந்திரன்“. இப்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.