Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி கர்ப்பம் இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று மாறன் பிளான் பண்ணினார். அதற்கு ஏற்ற மாதிரி மாறனுடன் வள்ளி விஜி கண்மணி அனைவரும் கூட்டணி போட்டு காய் நகர்த்தினார்கள். விஜிக்கு சின்ன ஒரு விபத்து ஏற்படுத்தும் அளவிற்கு பிளான் பண்ணிவிட்டு விஜிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார்கள்.
அப்படி கூட்டிட்டு போனதும் அங்கே விஜிக்கு பிளட் டெஸ்ட் எடுத்து விடுகிறார்கள். பிறகு விஜி வீட்டிற்கு வந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தயாராகுவதற்கு கிளம்பிவிட்டார். ஆனாலும் விஜிக்கு ஒரு பயம் ரத்த பரிசோதனையில் நம் கர்ப்பம் இல்லை என்று தெரிந்து விடுமோ என்று பதட்டப்பட ஆரம்பித்து விட்டார்.
விஜியின் பதட்டத்தை அதிகரிக்க கண்மணி, மாறன் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு ஆதாரத்தை வாங்கிட்டு வரப் போகிறார் என்று சொல்லிவிடுகிறார். உடனே விஜி அடியாட்களுக்கு போன் பண்ணி மாறன் வீரா உயிரோடையே வீட்டிற்கு வரக்கூடாது என்று சம்பவத்தை பண்ண சொல்கிறார்.
இந்த மாதிரி விஜி பண்ணுவார் என்று தெரிந்து ஆதாரத்தை வீரா கையில் கொடுத்துவிட்டு மாறன் மட்டும் தனியாக வருகிறார். அப்படி மாறன் வரும்போது விஜி அனுப்பிய ஆட்கள் மாறனை வழிமறித்து சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் மாறன் இவர்களிடமிருந்து எப்படியும் தப்பித்து விடுவார்.
இன்னொரு பக்கம் வளைகாப்புக்கு தயாராகிய விஜி சொந்தக்காரர்கள் முன்னாடி அவமானப்பட்டு வீட்டை விட்டு போவதற்கு வீரா ஆதாரத்துடன் வீட்டிற்கு வந்து விடுகிறார். ஆதாரத்தை வைத்து மாறன் போட்ட பிளான் வெற்றிகரமாக முடிக்கும் விதமாக விஜி வீட்டை விட்டு வெளியே போகப் போகிறார்.