தனுஷை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. 3 படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ட்விஸ்ட்

Sivakarthikeyan : சாதாரண தொகுப்பாளராக இருந்து இன்று சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தில் இருந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எவ்வளவு உச்சத்தை தொட்டிருந்தாலும் ரசிகர்களிடம் கேட்டது காட்டாத மனுஷன்

நேர்மையான நடிகராகவும், சிறந்த மனிதனாகவும் திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் படங்கள் வரிசையில் திரைக்கு வர காத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளிவந்தால் தங்கள் படம் ஓடாது என்று பல இயக்குனர்கள் பயந்து தங்கள் திரைப்படத்தை வெளியிட பயப்படுகின்றனர்.

தனுஷை ஓரம் கட்டிய SK :

தனுஷின் “3” திரைப்படம் வெளியாகி பயங்கரமான வரவேற்பை கொடுத்தது அந்த சமயத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் ஜோடி இணையத்தில் ட்ரெண்டாகி வந்து கொண்டிருந்தது. ராம் ஜனனி என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்த ஒரு பேராகவே மாறியது.

3 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் துணை கதாபாத்திரம் காமெடி ரோலில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அந்தத் திரைப்படத்திற்கு முன்பே “அது இது எது” நிகழ்ச்சியில் சிவகார்த்திகேனின் நகைச்சுவையான பேச்சுக்கு அதிக ஃபேன்ஸ் இருந்தனர்.

தற்போது 3 பட சூட்டிங் போது சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த ஒரு வரவேற்பு பற்றி தற்போது பல வருடங்கள் கழித்து செய்தி கசிந்துள்ளது. 3 பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது, தனுஷை பார்க்க பல ரசிகர்கள் கூடுவது வழக்கம் தான்.

ஒரு நாள் கேரவனில் இருந்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே இறங்கியுள்ளனர். ரசிகர்கள் எல்லாரும் ஆரவாரத்துடன் கத்த ஆரம்பித்தனர். அப்போது தனுஷ்க்கு கிடைத்த அந்த விசில் சத்தமும், சிறிதளவு மாறாமல் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது தான் ஆச்சரியம்.

அந்த சமயம் சிவகார்த்திகேயன் துணை நடிகராக மட்டுமே நடிந்திருந்தார். சிவகார்த்திகேயன் பிரபலம் ஆவதற்கு முன்னாடியே அவரது நகைச்சுவையான பேச்சு, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →