Dhanush: இந்த ராயல்டி விவகாரம் கடந்த சில வருடங்களாகவே இளையராஜா மீது ஒரு நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி விட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் பாட்டை யார் பயன்படுத்தினாலும் உடனே நோட்டீஸ் தான்.
அதில் சில தயாரிப்பாளர்களிடமிருந்து மிகப்பெரும் தொகையை இளையராஜா வாங்கிய தகவலும் இருக்கிறது. சிறு பட்ஜெட் பெரிய பட்ஜெட் என எந்த பாகுபாடு இல்லாமல் அவர் ராயல்டி கேட்டு கணிசமான தொகையை பார்த்து வருகிறார்.
ஆனால் இவரை ஒப்பிட்டு பார்க்கும்போது தனுஷ் உண்மையிலேயே பெரிய மனிதர் தான். வெற்றிமாறன் சிம்பு இணையும் படத்திற்கு அவர் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் காப்பி ரைட் கொடுத்துள்ளார்.
தனுஷ் இளையராஜா மாதிரி கிடையாது
அதேபோல் விஜே சித்து இயக்கும் படத்திற்கு கூட NOC கொடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும் தனுஷ் மீது கடும் விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மையில் அவருடைய வளர்ச்சியை பிடிக்காமல் இணைய கூலிப்படைகள் செய்யும் வேலைதான் இது.
அதில் சிம்பு, நயன்தாரா ரசிகர்கள் இந்த வேலையை முழுமூச்சாக பார்க்கின்றனர். ஆனால் தனுஷ் உண்மையில் அப்படி கிடையாது என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி இந்த ராயல்டி மூலம் வரும் காசை வச்சு தான் சோறு சாப்பிடணும்னு அவருக்கு எந்த அவசியமும் இல்லை. இளையராஜா மாதிரி நோட்டீஸ் விட்டு யாரு கிட்ட எவ்வளவு பில்லு போடலாம் என்ற எண்ணம் தனுஷிடம் கிடையாது.
இது தெரியாமல் அவரைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படியோ ஆனால் திரையுலகை பொருத்தவரையில் அவர் பலருக்கும் உதவக் கூடியவர் என பிஸ்மி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இளையராஜாவுக்கும் ஒரு குட்டு வைத்துள்ளார்.