விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் நெடுந்தொடராக வந்து கொண்டிருக்கிறது. இதில் கோபி கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் எப்பொழுதுமே மறக்க முடியாத அளவிற்கு நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவருடைய கேரக்டர்காக தான் இத்தனை வருஷங்களாக வெற்றிகரமாக சீரியல் ஓடி இருக்கிறது.
ஆனாலும் இப்பொழுது கதை எதுவும் இல்லாததால் இந்த வாரத்துடன் இறுதி அத்தியாயத்தை கொண்டுவர முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் இந்த சீரியலுக்கு பதிலாக புத்தம்புது சீரியலாக வரப்போகும் சீரியல் தனம் பாக்கியம். இதில் நீ நான் காதல் என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரேம் என்கிற ராகவ் கமிட்டாகி இருக்கிறார். இவருடன் தொடர்ந்து குணாளன் குமரேசன் என்பவரும் கமிட்டாகி இருக்கிறார்.
அந்த வகையில் இதில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து இருக்கிறார்கள். அடுத்ததாக பிக் பாஸ் மற்றும் செல்லமா சீரியலில் செல்லமா கேரக்டரில் நடித்து பிரபலமான அன்சிதா ஹீரோயினாக இணைந்திருக்கிறார். மேலும் தமிழும் சரஸ்வதி என்ற சீரியலில் நடித்த தர்ஷனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டு ஹீரோக்கள் மற்றும் இரண்டு ஹீரோயின்களை வைத்து வருவதால் தனம் பாக்கியம் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் இயக்குகிறார். இவர் இயக்கிய அனைத்து சீரியல்களுமே ஹிட் அடித்து இருக்கிறது. தற்போது மகாநதி சீரியலும் மக்களின் பேவரைட் சீரியலாக இருப்பதால் தனம் பாக்கியம் சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரை குளோபல் வில்லேஜஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாக்கிய சீரியலில் முடிவடைந்த உடன் தனம் பாக்கியம் வருகிறது.