கல்லா கட்ட காத்திருக்கும் கருப்பு.. படத்தில் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்

Surya : நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் கருப்பு. இதை RJ பாலாஜி அவர்கள் இயக்கியுள்ளார். சூர்யா நடிப்பு என்பது ஒருபக்கம் இருக்க, RJ பாலாஜி இயக்கமும் எப்போதுமே கலகப்பாகவும் அசத்தலாகும் இருக்கும் ஆகவே படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இதில் நடிகை திரிஷா நடிப்பது. “ஆறு” படத்திற்க்கு பிறகு இவர்கள் இணைவது அனைவர்க்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது “கருப்பு” படத்தின் “டீஸர்” வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. “ஜெய்பீம்” படத்தில் சூர்யாவிற்கு வக்கீல் கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டது. இதிலும் அதே போல் வக்கீல் கதாபாத்திரம் இந்த படத்திலும் உள்ளது.

படத்தில் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்..

ஆக படம் நன்றாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால் சூர்யா அவர்களுக்கு இரட்டை கதாபாத்திரமாக இருக்கும் என சினிமா வட்டாரங்களை பேச்சுக்கள் எழுந்து வருகின்றனவாம்.இதில் மற்றுமொரு ட்விஸ்ட் அந்த வில்லன் RJ பாலாஜியாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்.

இதுபோல் இரட்டை கதாபத்திரத்தில் சூர்யா கலக்குவது நமக்கு ஒன்னும் புதுசல்ல. “வேலு”, “மாற்றான்”, “மாஸ்”, “பேரழகன்” போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார். இந்த படங்களும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.

அதனால் சூர்யா அவர்களுடன் சேர்ந்து நாமும் “கருப்பு” படத்தின் வெற்றியை கொண்டாட காத்திருப்போம். இன்னும் இரட்டை கதாபாத்திரம் என்று தெரியவந்தால் அவ்வளவுதான் சூர்யா ரசிகர்களை கையில் பிடிக்கவே முடியாது. “கருப்பு” படத்தின் வெற்றியை கொண்டாடாத எதிர்பார்த்து காத்திருங்கள்.