ரஜினிக்காக வெகு நேரம் காத்திருந்த பிரதமர்.. வீட்டில் நடந்த ஆச்சரியமான விஷயம்

Rajinkanth : சினிமா துறையில் ஒரு சூப்பர் ஸ்டாராக இன்றளவும் ரஜினிகாந்த்க்கு பெரிய மதிப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. அவரது நடனம், நடிப்பு, ஸ்டைல் போன்றவை ஒரே நிமிடத்தில் அனைவரையும் கவர்ந்து விடும்.

ஒவ்வொரு ரசிகரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ரஜினிகாந்தை பார்க்க மாட்டோமோ என ஏங்கி கொண்டிருக்கின்றனர். சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் ஹிட் கொடுத்தும், வயதான பிறகும் தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் சினிமாவில் ஜொலித்து வருகிறார் ரஜினி.

வருகைக்கு காத்திருந்த பிரதமர்..

தற்போது ரஜினியை பற்றி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. இதை பார்த்த அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ரஜினிக்கு சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் செல்வாக்கா? என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர் நரசிம்மராவ் ஒரு நாள் ரஜினியின் வீட்டில் ரஜினி பார்ப்பதற்காக வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்போது ரஜினி ஒரு ஷூட்டிங்கில் இருப்பதாக கூறிவிட்டாராம். ரஜினியை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு பிரதமரே ரஜினி வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

மீண்டும் ரஜினியை பார்க்க வேண்டும் என்று துடித்த பிரதமர், ரஜினியை டெல்லிக்கு வர வைத்திருக்கிறார். பொதுவாகவே ஒரு பிரதமர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால், எந்த வாகனமாக இருந்தாலும் சோதிப்பது வழக்கம்.

ரஜினிகாந்த் தப்பா எடுத்து கொள்ளக் கூடாது என்று தனது வீட்டின் வெளியில் மெயின் கேட்டை கூட சாத்தாமல், ரஜினியின் வரவேற்புக்காக காந்திருந்திருக்கிறார் பிரதமர். இதைக் கேட்கும்போது ரஜினி சினிமாவை மட்டும் அல்ல அரசியலிலும் ஒரு முக்கியமான பிரபலமாக தான் அறியப்படுகிறார்.