விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் போகாமல் இருந்தால் நிலாவும் போக மாட்டார் என்ற நினைப்பில் சோழன் எனக்கு வேலை இருக்கிறது. அதை எல்லாம் முடித்துவிட்டு நான் நிலவை கூட்டிட்டு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் மனோகர் அதற்கு கொடுத்த பதில் நீங்கள் வேலையை முடித்துவிட்டு வரும்போது வாங்க. ஆனால் நான் இப்பொழுது நிலாவை கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டார்.
இதனால் சோழன் இப்படியே நிலாவை தனியாக அனுப்பி வைத்து விட்டால் ஒரேடியாக நம்மிடம் இருந்து பிரித்து விடுவார். அதனால் நாமும் போய் தான் ஆக வேண்டும் என்று முடிவு பண்ணி நிலாவுடன் கிளம்பிவிட்டார். நிலா கிளம்பும்பொழுது பல்லவன் ரொம்பவே ஃபீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார். அதற்கு நிலா, சமாதானப்படுத்தி விட்டு ஒரு வாரத்திற்குள் வந்து விடுவேன் என்று சொல்லி கிளம்பி விட்டார்.
பிறகு காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது மனோகர் திடீரென்று டிரைவரை கீழே இறங்க சொல்லி பஸ்ஸில் வீட்டிற்கு வா என்று அனுப்பி வைத்துவிட்டார். அதற்கு பதிலாக சோழனை டிரைவராக நினைத்து கார் ஓட்ட சொல்லி விட்டார். நிலாவும் ஏன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது நம் குடும்ப விஷயங்களை பேசிட்டு வருவோம் அதில் டிரைவர் எதற்கு இருக்க வேண்டும்.
அதனால் தான் அவனை அனுப்பி வைத்து விட்டேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். இருந்தாலும் இந்த மனோகர் என்ன பண்ணி நிலா மனசை குழப்ப போறாரோ என்ற பயத்தில் சோழன் இருக்கிறார். வீட்டிற்கு போன நிலாவே பார்த்ததும் அம்மா அண்ணி அண்ணன் என்று பாசத்தை காட்டிய பொழுது சோழன் அங்கே தனியாக நிற்பது போல் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.
நிலாவும் சோழனை கண்டு கொள்ளவில்லை என்பதற்கு ஏற்ப குடும்பத்தை பார்த்ததும் சந்தோஷத்துடன் ஒன்றாக இணைய ஆரம்பித்து விட்டார். பிறகு வீட்டிற்குள் போன நிலா சகஜமாகி விடுகிறார். ஆனால் சோழன் இக்கட்டான சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறதோ, என்ற பயத்திலேயே இருக்கிறார். நிலாவை வைத்து கேம் ஆரம்பித்து சோழனை வீட்டை விட்டு அனுப்பி நிலாவை தன் வீட்டிலேயே வைக்கும் அளவிற்கு மனோகர் பிளான் பண்ணி விட்டார்.