குணசேகரனின் மருமகள்களின் பிளானை சொதப்பிய தர்ஷன்.. வில்லங்கமாக முடிவெடுக்கும் அன்பு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், கதிர் நந்தினி அறிவுக்கரசி மூன்று பெரும் சேர்ந்து தர்ஷன் அன்புவின் கல்யாணத்திற்காக நகைகளையும் புடவைகளையும் எடுக்க போய்விட்டார்கள். குணசேகரன் மற்றும் விசாலாட்சி கோவிலுக்கு போய் விட்டார்கள். ஜனனி, ரேணுகாவை கூட்டிட்டு ஞானத்தை வெளியில் எடுக்கும் விதமாக லாயரிடம் பேச போய்விடுகிறார்.

ஈஸ்வரி தர்ஷினியை கூப்பிட்டு வெளியே போய் விடுகிறார். இப்படி எல்லோரும் வெளியே போன சமயத்தில் வீட்டிற்குள் தர்ஷன்,அன்பு மட்டும் தனியாக இருக்கிறார்கள். இந்த சான்ஸை பயன்படுத்திய தர்ஷன், அன்புவிடம் ஒரு வேலை விஷயமாக வெளியே போயிட்டு வருகிறேன் என்று நைசாக பேசி நம்ப வைத்து விடுகிறார். அதன்படி தர்ஷன் பைக் எடுத்துட்டு வெளியே போற மாதிரி போயிட்டு யாருக்கும் தெரியாமல் மாடிக்கு போய் விடுகிறார்.

மாடிக்கு போன தர்ஷன், பார்க்கவிடம் தனியாக கூப்பிட்டு பேசுகிறார். அப்படி பேசும் போது இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். உன்னை நிச்சயமாக சந்தோஷமாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். கீழே இருக்கும் அன்புக்கு சந்தேகம் வந்ததால் அங்கு வேலை பார்ப்பவரிடம் இங்கே யாராவது வந்தாங்களா என்று கேட்கிறார்.

உடனே அவரும் தர்ஷன் தம்பி மட்டும் மாடிக்கு போயிருக்கிறார் என்று சொல்லியதும் அன்பு சந்தேகப்பட்டு மாடியில் போய் பார்க்கிறார். அப்பொழுது ரூமுக்குள் இருந்து பார்கவி தர்ஷன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இவர்களுக்குள் நடக்க போகும் திருட்டு கல்யாணத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார். உடனே வில்லங்கதனமாக யோசித்த அன்பு, ரூம் கதவை லாக் பண்ணிவிட்டு அறிவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்.

இதனால் ரூமுக்குள் மாட்டிக்கொண்ட தர்ஷன் பார்கவி அடுத்து என்ன நடக்க போகுது என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நந்தினி, ஜனனிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார். ஜனனி, தர்ஷன் மற்றும் பார்கவியை காப்பாற்றுவதற்கு போகிறார். இதனால் குணசேகரன் வீட்டு மருமகள் போட்ட பிளான் சொதப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.