விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா சுதாகர் குடும்பத்தை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக பத்திரிக்கை மூலம் பேட்டி கொடுத்து சுதாகர் செய்த சதியையும், நித்திஷ் செய்த அட்டூழியத்தையும் போட்டு உடைத்து விட்டார். அத்துடன் ஐஜி இடமும் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் இனியாவின் எதிர்காலத்தை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் ஈஸ்வரி, இனியா செய்த காரியத்தால் பயப்பட ஆரம்பித்து விடுகிறார். பிறகு கோபி, எல்லோரும் சேர்ந்து ஒரு வாரம் வெளியே போயிட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார்.
அப்பொழுது எழில், சுதாகர் கொடுத்த பேட்டியை டிவியில் போட்டு காட்டுகிறார். அதில் சுதாகர் குடும்பம் நல்ல குடும்பம் போலவும் இனியா ஆகாஷ் தவறான உறவை பற்றி பொய்யாக சொல்லி இனியாவை அவமானப்படுத்தும் விதமாக மோசமாக பேசி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த பாக்கியா, வருத்தப்பட்டு இனியா கூடவே இருக்கிறார். பிறகு இனியா, புகார் கொடுத்த விஷயத்தை சொல்லி சுதாகர் குடும்பம் ஜெயிலுக்குள் போய்விடுவார்கள் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுதாகர் பொண்டாட்டி பிள்ளையை கூட்டிட்டு தலைமறைவாகி விட்டார்கள்
அதனால் சுதாகர் குடும்பத்தில் யாரும் இல்லை என்று போலீஸ் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் கோபியை தனியாக பார்த்து பேசும் சுதாகர் மிரட்ட ஆரம்பிக்கிறார். இனியா கொடுத்த பேட்டி தவறானது என்று பேட்டி கொடுக்க சொல்லி சுதாகர் வற்புறுத்துகிறார். இல்லையென்றால் குடும்பத்தில் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் கொடுக்கிறார்.
ஆனால் இதுக்கெல்லாம் பயப்படாத கோபி, சுதாகரை எச்சரிக்கை செய்துவிட்டு போலீசுக்கு போன் பண்ணுகிறார். ஆனால் சுதாகர் அதற்குள் கோபியை கீழே தள்ளிவிட்டு அங்கு இருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் விதமாக நித்தேஷ், இனியாவுக்கு போன் பண்ணி வர சொல்லி பேசுகிறார்.