Rajinikanth : “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” இந்த பாடலில் இருக்கும் வரி முற்றிலும் உண்மை. தற்போது இந்த வலைத்தளத்தை ஓபன் செய்தாலும் ரஜினியின் கூலி திரைப்படத்தின் அப்டேட் தான் வந்து கொண்டே இருக்கிறது.
ரஜினி சினிமாவில் தனக்கென்று தக்க வைத்த ஒரு இடத்தை இன்னொரு நடிகர் அந்த இடத்தை நிரப்ப முடியுமா என்று கேட்டால் கேள்வி குறிதான். வெறும் கண்டக்டராக இருந்த ஒருவன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தது சாதாரண விஷயம் அல்ல.
வாயை கொடுத்து மாட்டிகிட்டாரு..
தற்போது சினிமாவில் ஒரு படம் கூட ஃபிளாப் ஆகாமல், தனது எல்லா படத்தையும் ஹிட் லிஸ்ட்க்கு கொண்டு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்று சொன்னாலே தியேட்டரே அதிரும். அந்த அளவிற்கு தனது கதையை சிறந்த வடிவில் அமைக்கும் திறன் கொண்டவர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ” நான் முதலில் கூலி திரைப்படத்தின் ரஜினிகாந் சாரிடம் சொல்லும் போது, சார் நான் பொதுவாகவே கமல் சாரின் ரசிகன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை.
அதன்பின் சில நாட்கள் கழித்து கூலிப் பட டப்பிங் போது, நீங்க கமல் சார் ஃபேன் சொல்றீங்க கூலி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் உங்களை பார்த்திருக்கிறேன். என்று கூறினார். அதை காமெடியாகத்தான் அவர் சொன்னார்.
என்னை தவிர என் குடும்பத்தில் எல்லாரும் ரஜினி சார் ஃபேன் தான். சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் அந்த பாடலை கேட்டு தான் எனக்கு எங்க அம்மா சின்ன வயதில் சாப்பாடு ஊட்டி விடுவாங்களாம். முத்து படத்தில் ரஜினி சார் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு தான் கமல் சார் ஃபேன் ஆனேன்- லோகேஷ் கனகராஜ் “.