Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பிரச்சினையை முடித்துவிட்டு வீட்டிற்கு போன காவிரியிடம் சாரதா பிரச்சினை பண்ணும் விதமாக சண்டை போடுகிறார். விஜய்க்கு உதவி செய்ததை சொல்லி உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு பாட்டி, காவிரிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பசுபதியால் தான் விஜய் சிக்கலில் மாட்டி இருந்தார்.
அதனால் விஜய்யை காப்பாற்றி ஒரு வழியாக பசுபதியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். இனி பசுபதி தொல்லை நமக்கு இருக்காது என்று பாட்டி சொன்னதும் சாரதா சமாதானம் ஆகி விடுகிறார். அத்துடன் காவேரி, உனக்கு நான் சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிறேன். அதை மீறி எதையும் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போய் விஜய் நினைத்து பீல் பண்ணி அழுகிறார்.
விஜய்யும் காவிரி சரியாக பேசாமல் போய்விட்டது நினைத்து பீல் பண்ணுகிறார். அதனால் தொடர்ந்து காவிரிக்கு போன் பண்ணிக் கொண்டே இருக்கிறார். ஆனால் காவிரி, விஜய்யின் போனை எடுக்காமல் விஜய்யிடம் இருந்து விலக முயற்சி எடுக்கிறார். இதற்கு இடையில் வெண்ணிலா செய்த தவறுக்கும் கொடுத்த தொந்தரவுக்கும் பாட்டி தாத்தா மற்றும் விஜய் இடம் மன்னிப்பு கேட்கிறார்.
அத்துடன் மாமாவுக்கு போன் பண்ணி தாங்க பேசணும் என்று சொல்லிய பொழுது விஜய் இன்று ரெஸ்ட் எடு. நான் பேசி அவரை வீட்டுக்கு வர வைக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அந்த வகையில் வெண்ணிலாவின் மாமா நம்பிராஜனும் வீட்டுக்கு வந்து வெண்ணிலாவே கூட்டிட்டு போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு விஜய் இந்த நேரத்தில் போக வேண்டாம் வெண்ணிலாவும் தூங்கி இருப்பாள்.
அதனால் நாளைக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் கிளம்பும்பொழுது வெண்ணிலாவுக்கு அட்வைஸ் பண்ணும் விதமாக நம்பிராஜன் சில விஷயங்களை பேசி காவிரி மற்றும் விஜயின் கல்யாணம் குழந்தையை பற்றி எடுத்துச் சொல்லி வெண்ணிலா மனசை மாற்றி விடுவார். வெண்ணிலாவும் மாமா சொன்னதை கேட்டு காவேரி விஜய்யை விட்டு விலகிவிடுவார்.
அடுத்ததாக ஜெயிலுக்குள் இருக்கும் பசுபதியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக குமரனை கூட்டிட்டு காவேரி போகிறார். அங்கே போனதும் பசுபதியை சீண்டும் விதமாக காவிரியிடம் மோத வேண்டும் என்று நினைப்பது தப்பு இல்லை, ஆனால் காவிரியை ஒரேடியாக அடக்கி ஒரு இடத்தில் ஒடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீ தான் பாதிக்கப்பட்டு இருப்பாய் என்று பசுபதி மூஞ்சில் கரியை பூசும் விதமாக பேசிவிட்டு கிளம்புகிறார்.