Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், டல்லாக இருக்கும் அரசியை கூட்டிட்டு சரவணன் வெளியே போகிறார். அப்படி போனதும் பாண்டியன் கடைக்கு கூட்டிட்டு போகிறார். பாண்டியன் மகளைப் பார்த்து சந்தோஷத்தில் பேசுகிறார். பிறகு சரவணன் அரசி இரண்டு பேரும் சேர்ந்து செந்தில் வேலை பார்க்கும் ஆஃபீஸ்க்கு போயி சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்.
அங்கே கதிரும் வந்த நிலையில் எல்லோரும் சேர்ந்து வெளியே போகலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். உடனே காரில் நான்கு பெரும் சென்று ஹோட்டலுக்கு போய் சாப்பிடுகிறார்கள். சந்தோஷமாக அரசியை பார்த்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே பாண்டியன் இருந்த பொழுது கதிர் அடுத்து என்ன பண்ணப் போகிறாய் என்று கேட்கிறார்.
கதிர் டிராவல் பிசினஸை பத்தி சொல்லிய நிலையில் பாண்டியன் அடுத்தடுத்து என்ன பிளான் என்று கேட்கிறார். அதற்கு கதிர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிய பொழுது ராஜி லோன் விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறார். அதற்கு பணம் சொத்து இருக்கிறவங்க கேரண்டி கையெழுத்து போடணும் என்று ராஜி சொல்கிறார்.
உடனே நாளைக்கு வங்கிக்கு நானும் வருகிறேன், நான் வந்து கையெழுத்து போட்டுக் கொடுக்கிறேன். நீ பிசினஸை ஆரம்பி என்று பாண்டியன் கதிரின் இலட்சியத்துக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பச்சைக்கொடி காட்டி விடுகிறார். அந்த வகையில் பாண்டியன், செய்த உதவி மூலம் கதிர் அவருடைய வெற்றியை காட்டப் போகிறார்.
இதை எல்லாம் பார்த்த தங்கமயில், தன் புருஷன் எந்த வேலையும் பார்க்காமல் கடையிலேயே வேலை பார்ப்பதால் அந்த கடையை சொந்தமாக்கி விடவேண்டும் என்று பாக்கியம் சொன்ன அட்வைஸ் படி சகுனி வேலையை பார்க்கப் போகிறார்.