Surya : சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வலைத்தளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
RJ பாலாஜி இயக்கும் இத்திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடமிட்டு நடிக்கிறாரா? இல்லை இது சட்ட ரீதியான கதையா? என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். இணையத்தில் இந்த திரைபடடத்தின் பல புகைப்படங்களும் வைரலானது.
இதைப் பற்றி கண்டுக்காத சூர்யா தற்போது தனது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் வாசலில் காத்திருந்ததை கண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி அப்டேட் செய்தது ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்தது.
நேற்று வலைத்தளம் முழுவதும் சூர்யாவின் கருப்பு பட போஸ்டர் தான் வந்து கொண்டே இருந்தது. இதில் ஒரு சூர்யாவின் கருப்பு திரைப்பட புகைப்படம் பயங்கர விமர்சனத்திற்கு உள்ளானது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
டென்ஷனாகிய சாந்தனு..
சூர்யா தர்பூசணி சாப்பிடுவது போன்ற போஸ்ட் ஒன்று வைரலானது. அதை ஒரு வீடியோவால் பேமஸான தர்பூசணி திவாகரை வைத்து ஒப்பிட்டு மீம்ஸ் வலைத்தளங்களில் உலாவி வருகிறது. கஜினி திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா நடித்த சீனை தான் காப்பி அடித்துள்ளார் திவாகர்.
இதை பார்த்து, மிகவும் கோபம் அடைந்தார் பாக்யராஜின் நடிகர் மகன் சாந்தனு. இதெல்லாம் ரொம்ப தப்பு. தயவு செய்து இந்த போஸ்டை நீங்குங்கள் என்றும் வற்புறுத்தி இருக்கிறார். சூர்யாவுக்கு சப்போர்ட் செய்து இவர் போட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.