ஹரிஹர வீரமல்லு கொண்டாட்டம்.. ஒரு ஷோ ஓடுனதுக்கே சக்சஸ் மீட்டா.? வெளங்கிடும்

Hari Hara Veera Mallu: இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டருக்கு வந்தாலே மிகப்பெரிய வெற்றி தான். அந்த அளவுக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகளை சந்தித்து தான் சில படங்கள் ரிலீஸ் ஆகிறது.

அதற்காக ஒரு ஷோ முடிஞ்சதுமே சக்சஸ் மீட் கொண்டாடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இதுக்கு நம்ம ஊரே பரவாயில்லை என்று சொல்ற அளவுக்கு ஹரிஹர வீரமல்லு டீம் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் நடிப்பில் ஹரிஹர வீரமல்லு இன்று வெளியாகி இருக்கிறது. பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.

ஹரிஹர வீரமல்லு கொண்டாட்டம்

சோசியல் மீடியாவில் பயங்கரமாக ப்ரமோட் செய்யப்பட்டு வந்த இப்படத்திற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. பவன் கல்யாண் ரசிகர்கள் இதை பெரிய திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

அதற்காக ஒரே நாளில் சக்சஸ் மீட் கொண்டாடுவதெல்லாம் புதுசா இருக்கு சார் என்று தான் தோன்றுகிறது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

சாதாரணமாகவே ஒரு படம் வெளி வந்தால் நெட்டிசன்கள் சுற்றி சுற்றி மீம்ஸ் போட்டு கிண்டல் அடிப்பார்கள். இதில் இந்த செய்தி வெளிவந்த நிலையில் பவர் ஸ்டாரோட பவரே தனி தான். ஒரே நாளில் 1000 கோடி கிளப்ல சேர்ந்துட்டாங்களோ என கலாய்த்து வருகின்றனர்.

வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட படம் நடுநிலை ரசிகர்களை பொறுத்தவரையில் மிகவும் சுமார்தான். ஆனால் பவன் கல்யாண் ரசிகர்கள் இதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.