Rajini : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அனைவர்க்கும் பிடிக்கும் என்றே கூறலாம். ஆனால் அனைவருமே ரசிகர்களாக இருக்கவேண்டும் என்று எந்த அவசியம் இல்லை அல்லவா.
ஒருசில பேர் ஒருசில நடிகர்களை தனது ரோல்மாடலாக எடுத்துகொடு தந்து வாழ்க்கை பயணத்தை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பர். இது சினிமாவிற்கு மட்டுமல்ல அனைத்து துறையும் பொருந்தும்.
தற்போது ஒரு ஸ்வார்ஷ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் எடுத்து அந்த படத்திற்கான அப்டேட்தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
கமல் ரசிகன் எனக்கூறியதும் கோபப்பட்ட ரஜினி..
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் நிறைய விஷயங்களை மக்களுடன் பகிர்ந்தவண்ணம் இருந்து வருகிறார். இவர் இப்பொது கூறியுள்ளார் நான் கமல்ஹாசன் சாருடைய ரசிகன் என்றும். அவர்தான் என் inspiration என்றும் கூறியுள்ளார்.
இதையே ரஜினிகாந்த் அவர்களிடம் கூலி படத்தின் கதையையோ கூற அமர்ந்திருக்கும் போது நன் கமல் சார்ரின் ரசிகன் என கூறினாராம். அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பார்வை பார்த்து விட்டு, மௌனமாக இருந்தாராம்.
பிறகு ஷூட்டிங்கிலாம் முடிந்து டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது எனது அசிஸ்டண்டிடம் என்கிட்டயே “கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதை சொல்ல ஆரம்பிச்சார்”. இவரை “நான் ஆடியோ லான்ச்சில் பாத்துக்கிறேன்” என ஜாலியாக சொன்னார் ரஜினிகாந்த் என லோகேஷ் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.
கமல்ஹாசன் சார் என்னை “எனது நண்பன் ரஜினிகாந்திற்கு பொறுப்புணர்வோடு நல்ல படம் செய்து கொடுத்துவிட்டு வா” என்று கூறி அனுப்பி வைச்சார் எனவும் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.