அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு வரும் வரவேற்பு கடந்த சில ஆண்டுகளில் உச்சத்தை எட்டியது. வசூலும், டிக்கெட் விற்பனையும் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இதில், சில திரைப்படங்கள் மட்டுமே உண்மையான பிளாக்பஸ்டர் அடித்திருக்கின்றன.
ஜெயிலர் – 683,000 டிக்கெட்டுகள்: ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் அமெரிக்காவில் அபாரமான சாதனை படைத்தது. சுமார் 683,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது இது ஒரு சாதனை. ஃபுல் மீல் என்டர்டெயின்மென்ட், பாக்ஸ் ஆபிஸை பலமாக ஆட்சி செய்தது.
பொன்னியின் செல்வன் 1 – 646,000 டிக்கெட்டுகள்: மணிரத்னத்தின் விஷன், எளிமையாகவும், கலையாகவும் PS1 மூலம் வெளிப்பட்டது. 646K டிக்கெட் விற்பனை மூலம், இது ஹிஸ்டாரிக்கல் பிரமாண்டம் என்பதை நிரூபித்தது. தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் புகழையும் எடுத்துச் சென்ற படம்.
2.0 – 543,000 டிக்கெட்டுகள்: சங்கர் இயக்கத்தில், ரஜினி – அக்ஷய் குமார் இணைந்தது “2.0”. விஷுவல் எஃபெக்ட்ஸ் கலக்க, 543K டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஹாலிவுட் தரத்திலான சயின்ஸ் ஃபிக்ஷன் என அமெரிக்காவில் பெரும் வரவேற்பு.
லியோ – 520,000 டிக்கெட்டுகள்: தளபதி விஜய் நடித்த “லியோ”, ரசிகர்களை திரைக்கு இழுத்துக் கொண்டது. 520K டிக்கெட்டுகள் விற்றது, ஒரு மாஸ் ஹிட் என்பதை நிரூபிக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஃபார்முலா வொர்க் ஆகிப் போனது.
PS2 (519K) மற்றும் கபாலி (444K) டிக்கெட்டுகள்: இரண்டு படங்களும் தனித்துவமான சாதனை. இப்போதே Hype உருவாக்கியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் “கூலி”, இந்த பட்டியலில் நிச்சயம் நுழைவதை உறுதி செய்கிறது.
தற்போதைய விற்பனை டிரெண்ட் பார்க்கும்போது, 700K மேல் டிக்கெட் விற்பனை சாத்தியமே. தமிழ் சினிமா, உலக தரத்தில் பாராட்டு பெறுவது தொடரும்.