வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் வசூலித்த இந்தியாவின் Top 10 ஹிட் படங்கள்

இந்திய சினிமா உலகளாவிய வசூலில் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. குறிப்பாக சீனாவை உள்ளடக்கிய வெளிநாட்டு மார்க்கெட்டில் இந்திய படங்கள் செய்த சாதனைகள் மனதை வெகுவாக ஈர்க்கின்றன. தற்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக வசூல் செய்த 10 இந்திய படங்களை பார்ப்போம்.

முதலிடம் பிடித்திருக்கும் படம் தங்கல். அமீர் கான் நடித்த இப்படம் சீனாவில் பெரும் வெற்றிபெற்று, $233 மில்லியன் வசூலித்து வரலாற்று சாதனை படைத்தது. இது இந்திய சினிமாவின் சர்வதேச அடையாளமாக மாறியது.

இரண்டாம் இடத்தில் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் உள்ளது. இந்த படம் $126 மில்லியன் வரை வசூலித்து, பாக்ஸ் ஆஃபிஸில் அமோக வெற்றிபெற்றது. அமீர் கானின் பெயரால் சீனாவில் இது பெரிய ப்ளாக்பஸ்டராக மாறியது.

மூன்றாவது இடத்தில் பஜ்ரங்கி பைஜான், நான்காகவது இடத்தில் பாகுபலி 2 மற்றும் ஐந்தாவது இடத்தில் ஜவான் ஆகியவை உள்ளன. பஜ்ரங்கி $75.67M, பாகுபலி 2 $61M, ஜவான் $50M வசூலித்தன. ஜவான் சீனாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆறாவது இடத்தில் பதான் $49.20 மில்லியன் (சீனாவில் வெளியாகவில்லை) ஏழாவது அந்தாதுன் $49 மில்லியன், எட்டாவது பிகே $47.9 மில்லியன், ஒன்பதாவது RRR $44.6 மில்லியன் (சீனாவில் வெளியாகவில்லை) மற்றும் பத்தாவது இந்தி மீடியம் $35 மில்லியன் வசூலித்துள்ளன. இவை அனைத்தும் பல மில்லியனை தாண்டி இந்திய சினிமாவின் சர்வதேச வசூல் வலிமையையும், உலகளாவிய ரசிகர்கள் ஆதரவைத் தெளிவாக காட்டுகின்றன.

இனி வரவிருக்கும் வார் 2 மற்றும் கூலி ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடிக்குமா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. உலகமே நோக்கும் நிலையில் இந்திய சினிமா மேலும் உயர வேண்டும் என்பது ரசிகர்களின் பேராசையாக இருந்து வருகிறது.