Cinema : தமிழ் சினிமா, இது சும்மா ஒரு திரைப்படமாக மட்டுமல்ல… இது ஒரு கலாசார வழிவகை, ஒரு சமூகம் பேசும் குரல், ஒரு மக்கள் உணர்வின் பிரதிபலிப்பு என பார்க்கப்படுகிறது. இப்போது கலாசாரம் அழிந்து விட்டது போல் படம் தான் எடுக்கப்படுகிறது.
அஜித் :
அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு வலிமையான மனநிலை, ஒரு தன்னம்பிக்கையின் உருவமாக பார்க்கபடுகிறது. சினிமாவில் டாப் நடிகராக மட்டுமில்லை, தனது கார் ரேசிங்கிள் கண் மூடாமல் கவனம் செலுத்தி வருகிறார். 54 வயசை எட்டிய அஜித் தற்போது வரையிலும் சினிமாவில் உழைத்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
விஜய் :
சினிமாவில் இளைய தளபதி விஜய் என்று அன்பால் அழைக்கப்பட்ட விஜய், இன்று அரசியலில் தவெக கட்சி தலைவராக உருவெடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. ரசிகர்களே தொண்டர்களாக திரண்டுள்ளனர்.
ஒரு நடிகராக மக்கள் மனதை ஆண்ட விஜய், இன்று அரசியல்வாதியாக மக்கள் மனதை வெல்வாரா? என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
தற்போது விஜய்க்கு 51 வயது என்பது நம்ப முடியாத ஒன்று. சினிமாவில் தற்போது 50 வயதை தொட்ட நடிகர்கர்களில் விஜயும் ஒருவர். இதை ரசிகர்களால் கூட நம்ப முடியவில்லை.
சூர்யா :
பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் சூர்யா. தன் பாணியில் திரையில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து, இன்று யாரும் அசைக்க முடியாது ஒரு இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார்.
நேற்று சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் சூர்யா வீட்டின் முன்பு அலைமோதியது. இதை பார்த்து மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். தற்போது சூர்யாவுக்கு 50 வயது ஆகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.