அடேங்கப்பா! இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் 7 படங்கள்

Netflix : நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை அதிக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதற்கு காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் திரில்லரான வெப் சீரிஸ் இதில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 25 என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகிறது என்று பார்க்கலாம்.

முதலாவதாக பாலிவுட்டில் கோபி புத்திரன் இயக்கத்தில் வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா மற்றும் பலர் நடிப்பில் உருவான மண்டலா மர்டர்ஸ் படம் வெளியாகிறது. இந்த படம் திரில்லர் கலந்த ஒரு குற்றப்பிரிவை சம்பந்தமான கதைகளத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக ஒரு சர்வைவல் படமாக ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் படம் தான் Until Dawn. மைக்கேல் சிமினோ, ஓடெச்சா அசியோன் மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த படம் திகில் கலந்த படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அமானுஷ்ய சக்திகள் இடையே எவ்வாறு உயிர் தப்பிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

நெட்பிளிக்ஸில் வெளியாகும் 7 படங்கள்

Happy Gilmore 2 என்ற படமும் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த படத்தின் கதை முதல் டூர் சாம்பியன்ஷிப்பை வென்ற கோல்ஃப் வீரர் ஹாப்பி கில்மோர் தனது மகளின் பள்ளி கட்டணத்திற்காக 29 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய விளையாட்டை கையில் எடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தாய் மொழியில் உருவான The Red Envelope மற்றும் இந்தோனேசியா மொழியில் A Normal Women, ஜப்பான் மொழியில் Their Marriage ஆகிய படங்கள் வெளியாகிறது.

மேலும் டர்கிஸ் மொழியில் உருவான Letter From The Past என்ற படம் வெளியாகிறது. ஆகையால் தியேட்டரில் வெளியாகும் படங்களை காட்டிலும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் தரை இறங்குகிறது.