Surya : சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. கமல், ரஜினிக்கு அப்புறம் சூர்யாவுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. திறமையான நடிகர்களின் பட்டியலில் சூர்யாவும் ஒரு நடிகர்.
தற்போது 50 வயதை எட்டியுள்ள இவருக்கு பிறந்தநாளன்று ரசிகர்கள் கூட்டம் நீண்ட தூரம் நின்று ஆரவாரம் போட்டனர். இதை கண்டு மகிழ்ச்சியில் சிறிது நேரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இவரின் அடுத்த படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் பேச்சு தான் வலைத்தளத்தில் உலாவி வருகிறது. கருப்பு திரைப்படம் நீதி சொல்லும் திரைப்படமாக இருக்கிறதா? இல்லை சாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இருக்கிறதா? என்பது படம் வெளியானால் மட்டுமே தெரியும்.
பட்டையை கிளப்பும் வசூல்..
சூர்யாவின் கடைசி 3 திரைப்படங்களின் வசூலை பற்றி பார்ப்போம். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகளவில் 71 கோடி வசூல் செய்தது. ஷேர் தொகை 35.5 கோடியாக பிரிக்கப்பட்டது. கங்குவா திரைப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் உலக அளவில் 105 கோடியை தொட்டது. இந்த வசூலில் 52 கோடி ஷேர் செய்யப்பட்டது.
பயங்கரமான எதிர்பார்ப்புடன் வெளியான ரெட்ரோ திரைப்படம் 98 கோடி உலக அளவு வசூலை எட்டியது. இந்த வசூலில் 49 கோடி ஷேர் தொகையாகும். இந்த வரிசையில் தற்போது வெளியாகும் கருப்பு திரைப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.