Serial Trp: சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை அடுக்கடுக்காக கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் எந்த சீரியல்கள் அதிக அளவில் மக்களை கவர்ந்திருக்கிறது, எதுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம்.
அதன்படி இந்த வாரத்தில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியல் 7.93 புள்ளிகளை பெற்று இருக்கிறது. அடுத்ததாக 8.15 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கும் சீரியல் கயல் சீரியல். எப்பொழுதுமே இந்த சீரியல் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் முன்னேறியதால் நான்காவது இடத்திற்கு கயல் சீரியல் போனது. ஆனால் இந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு பின்னாடி தள்ளியது விஜய் டிவி சீரியல். அந்த வகையில் நான்காவது இடத்தில் இருக்கும் சீரியல் சிறகடிக்கும் ஆசை. இந்த சீரியல் 8.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
அடுத்ததாக எதிர்நீச்சல் பழையபடி ஃபுல் ஃபார்ம்-க்கு வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ற மாதிரி விறுவிறுப்பான கதைகளத்துடன் இருப்பதால் இந்த வாரம் 8.49 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று முடிச்சு சீரியல் 8.91 புள்ளிகளை பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வழக்கம்போல் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் 9.36 புள்ளிகளை பெற்றிருக்கிறது.