மருமகள் : தம்பிக்கு ஆதரவாக நிற்கும் அண்ணன்.. சத்யா செய்யப் போகும் அடுத்த பிரச்சினை

Marumagal : சத்யா செய்யும் ஒவ்வொரு பிரச்சனையும் தாக்குப் பிடிக்கும் குடும்பம். பொறுமையை கடைப்பிடிக்கும் மாதிரி இப்படி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் உயரும் சீரியலில் இதுவும் ஒன்று.

உண்மையை சொன்ன கார்த்தி..

ஆபீஸில் தன் அண்ணனை சந்திக்க செல்கிறான் கார்த்தி. கார்த்தியை பார்த்ததும் பிரபு கோபத்தில் என்னென்னமோ பேசி விடுகிறான். சிறிது நேரம் கழித்து பின்பு பொறுமையாக கார்த்திக் சொல்வதை கேட்கிறான் பிரபு.

“அண்ணா நான் அவளை கல்யாணம் பண்ணல. அவள் என்னை அசிங்கப்படுத்தினால் அதனால் தான் அவள் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டினேன்”. என்று நடந்த அத்தனையும் சொல்லி புலம்புகிறான். கோபத்தின் உச்சியில் இருந்த பிரபு அமைதியாக கேட்கிறான்.

எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியல அண்ணே அப்படி என்று கார்த்தி சொன்னதுமே, விடு பாத்துக்கலாம் என்று தோலை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லுகிறான் பிரபு. இந்த தன்னிடம் உள்ள கர்சிப்பை கார்த்திக்கு கொடுக்கிறேன்.

முகத்தை துடிக்க சொல்லி பிரபு சொன்னதுமே, ஒரு நிமிஷம் ஆச்சரியத்தில் பார்க்கிறான் நம்ம அண்ணனா இது என்று, கார்த்தி முகத்தை துடிக்கிறான். என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிர்க்கவும் காத்திக்கை ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான் பிரபு.

பூஜை அறையை தயார் செய்து கொண்டிருக்கிறாள் ஆதிரை. சத்யாவை விளக்கை ஏற்ற வைக்க வேண்டும் என்ற பேச்சு குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டி உடனே கார்த்தியிடம் சத்யாவை அழைத்த வருமாறு கேட்கிறாள். ” எனக்கும் அவளுக்கும் நடந்தது கல்யாணமே இல்லை. நீங்க சும்மா இருங்க என்று பேசுகிறான் கார்த்தி.