Prasanna : நடிகர் பிரசன்னா தமிழ் திரையுலகத்தில் “5 ஸ்டார்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஹீரோ கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் கலந்தே நடித்திருப்பார்.
இவருக்கு ஹீரோ கதாபாத்திரம் கை கொடுத்ததை விட, வில்லன் கதாபாத்திரம் அதிக அளவில் கை கொடுத்துள்ளது. இவருக்கு ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் பெருமளவிற்கு பேரையும் புகழையும் சம்பாதித்தும் கொடுத்துள்ளது.
இவர் பெரும்பாலும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட சிறிதும் தயக்கம் இல்லாமல் நடித்த அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருப்பார். இவர் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரம் கூட நடித்திருப்பார்.
மக்கள் இவரை நடிகராக ரசித்ததை விட வில்லனாக தான் ரசிக்கிறார்கள் ஆகவே இவரும் அந்த மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கெஞ்சி கேட்ட பிரசன்னா..
அதாவது இவர் சில படங்கள் ஹீரோவாக நடித்து சிறிது காலம் இடைவெளி விட்டு இவர் நடிக்க வந்த காலகட்டத்தில், அதாவது 2015ல் இரண்டு மூன்று படங்களை ஹிட் கொடுத்த இயக்குனரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். அப்போது அவர் என்னை பார்த்து எப்போது நீங்கள் முதல் படம் பண்ணுனீர்கள் என்று கேட்டார் நான் 2002ல் செய்தேன் என கூறினேன்.
அதற்கு அவர் சிறிதும் யோசிக்காமல் “டூ லேட்” என கூறிவிட்டார். ஆனால் அவர் அவருடைய முதல் படத்தோட ஹீரோவாக விக்ரம் சாரைத்தான் தேர்வு செய்திருந்தார்.
விக்ரம் சாருக்கு அந்த வயசு ஒன்னும் லேட் இல்லையே? விக்ரம் சாருக்கு நடந்த மேஜிக் எனக்கு நடக்காதா என்று நானே எண்ணிக் கொண்டு வந்துவிட்டேன்.
அப்போதிலிருந்து நான் யாருகிட்டயும் வாய்ப்பு கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தேன் என்றும் கூறியுள்ளார். ஆகையால் இவர் கூறியிருப்பது இயக்குனர் பாலா அவர்களை தான் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பாலா அவர்களது பெயரை கூட சொல்லாமல் நாகரிகமாக இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் பிரசன்னா.