இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறு.. அரசியல் தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் சேரன்

Cheran: தரமான படைப்புகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் சேரன் தற்போது அரசியல் தலைவரின் வாழ்க்கையை கையில் எடுத்துள்ளார். இன விடுதலை போராட்டத்தின் வரலாறாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

இதுவரை காமராஜர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வந்திருக்கிறது. அதில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தான் சேரன் இயக்க இருக்கிறார்.

அது குறித்த அறிவிப்பு டைட்டில் மற்றும் போஸ்டருடன் வந்துள்ளது. அய்யா என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை GKM தமிழ்குமரன் தயாரிக்கிறார். இதில் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறு

ராமதாஸ் அவர்கள் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்தபோதே தன் இன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வறுமையை போக்குவதற்கும், அவர்களுக்கு என தனி ஒதுக்கீடு ஆகியவற்றிற்காக போராடி இருக்கிறார்.

அவர் ஆரம்பித்த கட்சி தான் இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அது அத்தனையும் அவருடைய வரலாற்று படத்தில் நிகழ்வுகளாக வர இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியான நிலையில் சேரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதேபோல் இன்று டாக்டர் ராமதாஸ் தன்னுடைய 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது பட குழு.