Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் வந்து இருப்பது விஜயாவுக்கு பிடிக்கவில்லை. அதிலும் தற்போது விஜயா ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதால் அதற்கு காரணம் கிரிஷ் வந்த நேரம் தான் சரியில்லை என்று மொத்த பழியையும் தூக்கி போட்டார். இதை கேட்டு முத்து மீனாவுக்கு கோபம் வந்த நிலையில் க்ரிஷ் பாட்டி, போன் பண்ணி கிரிஷை பார்க்கணும் என்று சொன்னார்.
அதனால் நானும் மீனாவும் கூட்டிட்டு போயிட்டு வருகிறோம் என்று முத்து விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா, ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது இதுல நீங்க வேற இவனை கூட்டிட்டு போகணுமா? அதான் வீட்ல சும்மா இருக்கால்ல ரோகிணி, அவள் கூட்டிட்டு போகட்டும் என்று சொல்கிறார்.
அதன்படி ரோகிணியும், நானே கூட்டிட்டு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி கிரிஷை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அங்கே போனதும் கிரிஷ் பாட்டி இன்னும் ஒரு வாரத்திற்கு ஹாஸ்பிடலில் இருந்து ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணி, க்ரிஷ் அந்த வீட்டில் இருந்தால் நான் மாட்டிக் கொள்வேன் என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி அம்மா, ஒரு வாரம் மட்டும் சமாளித்துக் கொள். அதற்குள் நான் வீட்டுக்கு வந்து விட்டேன் என்றால் கிரிஷை கூப்பிட்டுக்கொள்வேன். அவனால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிவிடுகிறார். பிறகு எல்லாம் முடிந்து விட்டு க்ரிஷ் ஸ்கூலுக்கு கிளம்பும் பொழுது முத்து மீனா தன் பெற்ற பிள்ளைகள் போல பார்த்து ஒவ்வொன்றையும் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
இதை பார்த்து கடுப்பான மனோஜ், ரோகினிடம் அம்மாவுக்கு உன் மீது இருக்கும் கோபம் குறைய வேண்டும் என்றால் இந்த கிரிஷை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்புவதற்கு முயற்சி செய். அப்படி நீ செஞ்சு விட்டால் அம்மாவுக்கு உன் மீது இருக்கும் கோபம் குறைந்து விடும் என்று மனோஜ் சொல்கிறார். ஆனால் ரோகிணி, இதையெல்லாம் விட தற்போது உங்க அம்மா இருக்கும் பிரச்சினையை சரி செய்தால் போதும் என்று சொல்லி ரதி வீட்டுக்கு மனோஜை கூட்டிட்டு போகிறார்.
அப்படி போனதும் மனோஜ், ரதி வீட்டில் உள்ளவர்களிடம் இதற்கு ஒரே தீர்வு உங்க பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து விடுங்கள் என்று சொல்கிறார். இதை கேட்டதும் பெண் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கோபம் அதிகமானதால் மனோஜை அங்கே கட்டிப்போட்டு விடுகிறார்கள். மனோஜ்க்கு என்ன பேசுறேன் எப்படி பேசணும் என்று தெரியாத பொழுது இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அடுத்ததாக அம்மாவின் பயத்தை சரி செய்ய வேண்டுமென்றால் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்று முத்து மீனாவும் பேசிக் கொள்கிறார்கள். உடனே மீனா, பார்வதி அத்தை இடம் அந்த திலீபன் வீட்டு நம்பரையும் அட்ரஸையும் வாங்கிட்டு நம்ம போய் பேசலாம் என ஐடியா கொடுக்கிறார். அதன்படி முத்துவும் சரி என்று சொல்லி பிரச்சினையை முடிப்பதற்கு முயற்சி எடுக்கிறார்.