1980இல் நீரோட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் விஜயகாந்த். இவரை ஒரு நடிகனாக அறியப்பட்டது எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை. அதன் பின் 35 ஆண்டுகள் சினிமாவில் புரட்சி செய்தார். கடைசியாக 2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் நடித்தார்.
2023 ஆம் ஆண்டு 71 ஆம் வயதில் மரணித்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்தை இப்பொழுது ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் சினிமாவில் தோன்ற செய்துள்ளனர். மீண்டும் விஜயகாந்தை சினிமாவில் தோன்றச்செய்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீபத்தில் விஜய் நடித்த கோட் படத்திலும், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தவன் படத்திலும் திரையில் தோன்றினார். இதன் மூலம் இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்பொழுது விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மூன்று படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர.
புலன் விசாரணை: 1990களில் வெளிவந்து சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது புலன் விசாரணை படம். இந்த படத்தை இப்பொழுது ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். அப்பவே இப்போதுள்ள டெக்னாலஜிகளை பயன்படுத்தி அசத்தியிருந்தால் ஆர்கே செல்வமணி.
மாநகர காவல்: போலீஸ் கதாபாத்திரத்திற்கு தனியாக ஒரு ஸ்டைலும், அந்தஸ்தும் ஏற்படுத்திய படம் இது. ப்ரைம் மினிஸ்டரை காப்பாற்றும் ஏசிபி சுபாஷ் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மாஸ் காட்டிருப்பார். பின்னணி இசை இந்த படத்தில் மிரட்டல் செய்திருந்தது.
சேதுபதி ஐபிஎஸ்: தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் கதாபாத்திரம் என்றாலே இந்த படம் தான் அனைவரது நினைவிலும் வரும். அப்பொழுதே பி வாசு இந்த படத்தை பிரமிக்கும்படி இயக்கியிருந்தார். இந்தப் படத்தையும் Re- ரிலீஸ் செய்ய உள்ளனர்.