பாண்டியன் முன் ஓவராக ஆட்டம் ஆடும் செந்தில்.. தங்கமயிலுக்கு பதிலடி கொடுத்த சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் பண்ண போகும் பிஸ்னஸ்க்கு உதவி செய்யும் விதமாக பாண்டியன் லோன் வாங்க போகும் விஷயத்திற்கு கேரண்டி கையெழுத்து போடுவதற்கு தயாராகி விட்டார். ஆனாலும் கதிருக்கு, தான் முயற்சியால் எல்லாத்தையும் பண்ண வேண்டும். முக்கியமாக அப்பா எதுவும் நமக்கு உதவி செய்யக்கூடாது, ஏனென்றால் அதை வச்சு நம்மளை செய்வார் என்ற ஒரு பயம்.

அதனால் ராஜிடம் நீ ஏன் அப்பாவிடம் சொன்னாய் என்று கேட்டார். அதற்கு ராஜி நீ நினைக்கிற மாதிரி மாமா எதுவும் உன்ன சொல்ல மாட்டார். உன்னுடைய நல்லதுக்காகத்தான் யோசித்து எல்லாம் செய்வார் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக பாண்டியன் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது செந்தில் ஆபீஸ்க்கு கிளம்ப ஆரம்பிக்கிறார்.

செந்தில் பண்ணும் விஷயத்தை பார்த்து பாண்டியன் நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் நக்கல் அடிக்கிறார் என்று தெரிந்தும் செந்தில் வேண்டுமென்றே வீட்டுக்குள்ளே வந்து ஆபீசுக்கு கிளம்புவதற்கு ஒவ்வொன்றாக செய்து அளப்பரியை கூட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த கோமதி இவங்களுக்கு ஒரு வேலையை இல்லை என்று புலம்பிக்கொள்கிறார். அடுத்ததாக சரவணன் வந்தோம் கடை வேலையை சொல்லிவிட்டு கதிரை கூட்டிட்டு பேங்குக்கு போவதற்கு தயாராகி விட்டார்.

இதற்கிடையில் தங்கமயில், அம்மாவுக்கு போன் பண்ணி 20 லட்சம் ரூபாய்க்கு கேரண்டி கையெழுத்து போட போற விஷயத்தை சொல்கிறார். உடனே பாக்கியம் இதை வைத்து மூட்டி கொடுக்கும் விதமாக எல்லாத்தையும் மத்த பசங்க கொடுத்துட்டா உன் புருஷனுக்கு என்ன இருக்கும் என்று பிரச்சனை பண்ணும் விதமாக போட்டு கொடுக்கிறார். இதைக் கேட்டதும் தங்கமயில் சரவணன் இடம் இதைப் பற்றி விசாரிக்கிறார்.

அதற்கு சரவணன் பதிலடி கொடுக்கும் விதமாக உங்க அம்மாவிடம் பேசுவதை நிப்பாட்டு. உங்க அம்மா ஒன்னும் அவ்வளவு நல்லவங்க கிடையாது, பொய்யும் பித்தலாட்டமும் பண்ண தான் தெரியும். இங்கு நடக்கிற விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்வதை நிறுத்திக் கொள். கதிருக்கு என்ன பண்ணனும் எங்க அப்பாவுக்கு என்ன செய்யணும் என்று தெரியும். நீ இதுல தலையிட வேண்டாம் என்று பதிலடி கொடுத்து விடுகிறார்.

அடுத்ததாக கதிரை கூட்டிட்டு பேங்க் போன பாண்டியன் எல்லா விஷயத்தையும் கேட்டுக் கொண்டு கையெழுத்து போடுவதற்கு தயாராகிவிட்டார். அதனால் கதிர் நினைத்தபடி பிசினஸ் செய்ய போகிறார்.