மனோகர் செய்யும் சூழ்ச்சியால் நிலா மனசுல இடம் பிடிக்கும் சோழன்.. பாண்டியன் சொன்ன விஷயம்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவின் அப்பா வீட்டிற்கு வந்த சோழன் நம்மளை சுற்றி என்ன நடக்கிறது, மாமனார் என்ன செய்யப் போகிறார் என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். ஆனால் மனோகர், நிலா இருக்கும் பொழுது சோழனிடம் மாப்பிள்ளை என்று மரியாதை கொடுத்து பேசுகிறார். நிலா இல்லை என்றால் சோழனை அவமானப்படுத்தி விடுகிறார்.

கூடவே நிலாவின் அண்ணனும் சேர்ந்து கொண்டு சோழனை கிண்டல் அடிக்கிறார். இதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத சோழன், நிலாவின் சந்தோஷத்தை பார்த்து உண்மை சொல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு நிலா, அண்ணியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோகர் பாசமாக பேசிய விஷயங்களை சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

உடனே அண்ணி, இதுதான் சான்சு உனக்கும் சோழனுக்கும் எந்த சூழ்நிலையில் கல்யாணம் ஆனது என்று சொல்லிவிட்டால் மாமா உன்னை புரிந்து கொண்டு இங்கே இருக்க வைத்து விடுவார். நீயும் ஆசைப்பட்ட மாதிரி வேலை பார்க்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் நிலா, அதெல்லாம் வேண்டாம் நான் ஒரு வாரத்துக்கு அப்புறம் சோழன் வீட்டிற்கு போய் விடுவேன்.

எனக்கு அங்கு இருந்து வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசை. அதே மாதிரி சோழன் குடும்பத்தையும் விட்டுட்டு என்னால் இருக்க முடியாது என்று சொல்லி சந்தோஷமாக இருந்த விஷயத்தை பற்றி பேசுகிறார். அடுத்ததாக சோழன், பாண்டியனுக்கு போன் பண்ணி மனோகர் செய்யும் சூழ்ச்சியை சொல்லி பயத்துடன் பேசுகிறார். அதற்கு பாண்டியன், நீ கொஞ்சம் உஷாராக இருந்து கொள்.

தனியாக இருக்க வேண்டாம் எப்பொழுதும் நிலாவுடன் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அடுத்ததாக மனோகர் மற்றும் நிலவின் அண்ணனும் பேசிக் கொள்வதை சோழன் கேட்டுக்கொள்கிறார். அதாவது நிலா ரூமில் சோழன் போய் தூங்க கூடாது அதற்கு ஏற்ற மாதிரி ஏதாவது ஒரு சதி செய் என்று மனோகர் சொல்கிறார்.

இதை கேட்டதும் சோழன், நிலா ரூம்குள் போய் தூங்கலாமா என்று சொல்லி ஒரே ரூமுக்குள் போய்விடுகிறார். இதனால் கோபப்படும் நிலாவின் அண்ணன் மற்றும் மனோகர் இதற்கெல்லாம் சேர்த்து டபுள் மடங்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோழனை வச்சு செய்யப் போகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் செய்யும் சூழ்ச்சியால் சோழனுக்கு சாதகமாக முடியப்போகிறது. அந்த வகையில் ஒரு வாரத்திற்குள் நிலாவின் மனசில் சோழன் இடம் பிடித்து விடுவார்.