ஜோதிகா : வாலி திரைப்படத்தில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே பேமஸ் ஆன நடிகை ஜோதிகா. இன்று சூர்யாவின் மனைவி என்று அறியப்பட்டாலும் இவருக்கென சினிமாவில் ஒரு தனி அடையாளமே உருவாகி உள்ளது.
வடநாட்டில் இருந்து வந்து சினிமாவில் கொடி கட்டிப் பிறந்த ஜோதிகா. ஒரு கட்டத்தில் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்தது. திருமணமான பெண்கள் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் சில வருடங்களுக்கு பிறகு தான் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் கால் பதித்தார்.
சினிமாவில் ஆதி காலத்தில் ” நிறைய படங்களில் புகை பிடிக்கிற, குடிக்கிற நிறைய காட்சிகள் இருக்கிறது. அது எனக்கு சுத்தமாகவும் பிடிக்காது” என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் கூறிய போது என்ன ஜோதிகா இப்படி இருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் நல்ல விமர்சனம் வந்தது.
பல்டி அடித்த ஜோதிகா..
தற்போது பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் சூர்யாவின் பிறந்தநாள் அன்றுதான் நிறைய போஸ்டர்களும் வாழ்த்துக்களும் கருப்பு திரைப் படத்தை வைத்து வந்து கொண்டிருந்தது.
சூர்யா சிகரெட் அடிப்பது போன்ற போஸ்டர்களும் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் இதைப் பற்றி ஜோதிகா பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “இப்ப ரீசண்டா கருப்பு திரைப்படத்தின் போஸ்டர் பார்த்தேன். அதில் சூர்யாவின் லுக் நல்லா இருக்கிறது”
ஜோதிகா இப்படி கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிசயை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் புகை பிடிப்பது, குடிப்பது இதை வேண்டாம் என பேசிய ஜோதிகா தற்போது கணவனான சூர்யாவை பார்த்து மட்டும் பாராட்டுவது நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.