டாப் ஹீரோக்களுக்கு கூட முடியல.. அசால்ட்டாக தட்டி தூக்கும் வெற்றிமாறனின் வளர்ப்பு, புகழ்ந்த பிரபலம்

Soori : நகைச்சுவை நடிகர் சூரி என்று சொன்ன காலம் போய் ஹீரோ சூரி என்று அழைக்கும் காலம் வந்துவிட்டது. காலம்தான் எல்லாத்தையும் மற்றும் என்று கூறுவார்கள். ஆனால் காலம் எதையும் மாற்றாது, அந்த காலத்திற்குள் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே உண்மை.

அதுபோலத்தான் காலம் உருண்டோடிக்கொண்டிருக்க சூரி அவர்கள் அப்படியே இருந்திருந்தால் ஏதும் நடந்திருக்காது, தன் திறமையை மெருகேற்றிக்கொண்டு ஒரு கழுகு போல் அத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டு தன்னை ஹீரோவாக மாற்றியுள்ளார் என்றே கூறலாம்.

நிதானத்துடன் கூடிய முயற்ச்சி என்றுமே வெற்றி பெரும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சூரி. இவர் தற்போது தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

டாப் நடிகர்களுக்கு கூட முடியவில்லை..

கே ராஜன் அவர்கள் தற்போது பேசுகையில் சூரியை பற்றி அவ்வளவு புகஸ்த்தும், உண்மையையும் கூறியுள்ளார். அதாவது பெரிய பெரிய நடிகர்கள் செய்ய முடியாததை கூட சூரி அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார் என உண்மையை கூறியுள்ளார்.

அசால்ட்டாக செய்துமுடிக்கிறார் சூரி..

ஆமாம் கமல், அஜித் அவர்களால் கூட தான் நடித்த படத்தை தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுக்க முடியவில்லை. ஆனால் சூரி அவர்கள் தொடர்ந்து அவரிடத்து நடிப்பில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அசால்ட்டாக அந்த வேலைகளை செய்து வருகிறார் சூரி என கூறியுள்ளார் கே ராஜன்.

திறமையும், முயற்சியும் சூரி அவர்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சூரி அவர்கள் கதைக்களத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் மேலும் பல உச்சங்களை அடைவர் என்பதில் இன்றளவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இவர் தான் கடந்து வந்த பாதைகளை மரகத ஒரு நடிகரும் கூட.