சினிமாவுக்கு bye சொல்லும் வனிதா.. பேட்டியில் புதிர் கிளப்பிய சம்பவம்

Vanitha : ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடி போட்டு நடித்து, இன்று பல நெகடிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நடிகையாக வலம் வருகிறார் வனிதா. இவரைப் பற்றி பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எவ்வளவு பேச்சு வந்தாலும் இரும்பு மனுசி மாதிரி தாங்கி கொண்டிருக்கிறார்.

இதனால் வந்த வினை..

இவர் நான்கு திருமணம் செய்து தான் ட்ரெண்டிங் ஆனார். விஜயகுமாரின் மகளாக இருந்து கொண்டு அவரது பெயரை கெடுக்கிறார் என்ற பல விமர்சனங்கள் அப்போதே வந்தது. ஒவ்வொரு திருமணத்தின் முடிவில் இருந்தும் பின்வாங்காமல் மீண்டும் திருமணம் செய்து வந்தது மக்களிடையே பேசும் பொருளானது.

இதற்கிடையில் தன் முன்னால் கணவருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை இயக்கி இவரே நடித்திருந்தார். இதில் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற்றதால், கோபத்துக்கு ஆளாகி இளையராஜா காப்பி ரைட்ஸ் புகார் கொடுத்தார்.

திட்டினாலும் பரவாயில்லை..

பின்பு பேட்டியில் பல விஷயங்களை வனிதா பகிர்ந்தார். நான் அவர் வீட்டில் சின்ன வயதில் இருந்தே வளர்ந்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. இசையில் அவர் கடவுள் மாதிரி அவரை மிஞ்ச யாருமே இல்லை.

இப்படி இளையராஜா என் மீது புகார் கொடுத்ததை நான் எதிர்பார்க்கவில்லை. என்று இவர் பேசியது மீடியாவில் மீண்டும் வைரலானது. அதைப் பார்த்த இணைய வாசிகள் இவங்களுக்கு வேலையே இல்லை என்று கமெண்ட் செய்து வந்தனர்.

என்னுடைய படத்தை பாருங்கள். இந்தப் படத்தை பார்த்த பிறகு என்னை திட்டினாலும் பரவாயில்லை. என் படத்தில் எந்த ஒரு காப்பியும் நான் அடிக்கவில்லை. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் என்னுடை கண்டன் தான்.

என்னுடைய படத்தில் ஒரு சீன் காப்பி அடித்து இருந்தால் கூட நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் இதை எழுதி வைத்துக்கோங்க-வனிதா. இப்படி வனிதா தற்போது பேட்டி அளித்தது சினிமா வட்டாரத்தையை பெரும் அதிர்வலைக்குள்ளாக்கியது.