ஆகாச வீரன், பேரரசி, அரசாங்கமாக ஜெயித்த தலைவன் தலைவி.. பரோட்டாவில் புரட்சி செய்யும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று தலைவன் தலைவி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மகாராஜா படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 மற்றும் ஏஸ் படங்கள் பெரிதும் கைகொடுக்கவில்லை.

மதுரை ஒத்தக்கடையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. விதவிதமான பரோட்டாக்களை காண்பித்து ஆரம்பத்திலேயே அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜ். அதிலும் மதுரை ஸ்டைலில் அவர்கள் செய்யும் பன் பரோட்டா அட்டகாசத்திலும் அட்டகாசம்.

இப்படி கதையை நகர்த்திக் கொண்டு போகும் தலைவன் தலைவி படத்தில். கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை மற்றும் அவர்களுக்கு உண்டான காதல், சொந்தங்களின் குறுக்கீடு போன்றவற்றை எதார்த்தமாக கொடுத்து சலிப்பு தட்டாமல் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

அதைப்போல் இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கு அவர் வைத்த பெயர்களும் நன்றாக இருக்கிறது. ஆகாச வீரனாக விஜய் சேதுபதியும், பேரரசி (நித்யாமேனன்) அவரது தந்தையின் பெயர் அரசாங்கம், இப்படி வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மதுரை சுற்று வட்டாரத்திற்கு ஏற்ப யோகி பாபு, , காளி வெங்கட், சரவணன், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, செம்பன் வினோத், சென்றாயன் கதாபாத்திரங்களை கட்சிதாமாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகாச வீரன் மற்றும் பேரரசி இவர்களுக்குள் ஏற்படும் சண்டை. சொந்தங்களால் ஏற்படும் பிரிவுதான் கதை.

மல்லுக்கட்டுவதும், கொஞ்சுவதுமாய் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்கள் தான் என்றாலும் இது சற்று வித்தியாசம். அதை போல் நித்யா மேனன் கட்டையை தூக்கி அடிக்க செல்லும் காட்சி சற்று புதிதாக இருக்கிறது . சொல்லப்போனால் நானா ஆசைப்பட்டேன், நீங்கள் தான் கட்டி வைத்தீர்கள் இப்படித்தான் கதைக்களம் நகர்கிறது.