ஸ்ரீ பற்றி தயக்கமாக பேசிய லோகேஷ் கனகராஜ்.. நடந்தது என்ன?

Actor : வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் ஆரம்பித்து, ஓநாயும் நாய்க்குட்டியும் திரைப்படத்தில் தனது வெற்றியை கொடியை நட்டியவர் நடிகர் ஸ்ரீ. சினிமாவில் அவரைப் பற்றிய பல பேச்சுகள் இருந்து வருகிறது. சினிமாவட்டாரத்தில் ரகசிய பேச்சு இருந்துதான் வருகிறது.

ஸ்ரீயின் இயற்கையான நடிப்பும் சமூக நீதி சொல்லும் கதையும், திரைப்படத்திற்கு ஒரு நல்ல புகழை தேடி தந்தது. பின்பு 2017 பிக் பாஸ் மூலம் முதல் வாரங்களில் மக்களின் கவனத்தைப் பெற்றார். பின்பு அவர் சுய யோசனையால் பிக் பாஸில் இருந்து விலகி விட்டார்.

மனநல பாதிப்பு..

இந்நிலையில் சினிமாவை வேண்டாம் என ஒதுங்கி, திடீரென ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அது பயங்கர வைரல் ஆனது. மாநகரம் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீயா இது? என்று அனைவரும் ஆச்சரிய படும் வகையில் அவரது தோற்றம் இருந்தது.

வலைத்தளத்தில் திறந்தாலே அவரது நியூஸ் தான் இருக்கும். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீ தற்போது நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்தது. 2017 மாநகரம் திரைப்படத்தில் நடிக்கும்போது லோகேஷ் கனகராஜ் ஸ்ரீயும் நல்ல நண்பர்களாகவே பழகினர்.

தயக்கம் அடைந்த லோகேஷ் கனகராஜ்..

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரீயை பற்றி லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டபோது, அவர் கூறியதாவது ” ஸ்ரீ பற்றி பேசவே தயக்கமாக இருக்கிறது. ஆனால் அவன் இப்போது நல்லா இருக்கிறான். எனக்கு கால் பண்ணி புக் ரிலீஸ் செய்யலாம் கூட கேட்டான்.

ஸ்ரீ பற்றிய விவரமாக கேட்கும் போது, என்னதான் நான் அவனுடைய பிரண்டாக இருந்தாலும், அவனுடைய விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பகிர முடியாது. ஸ்ரீ பற்றிய பேச எனக்கு கொஞ்சம் தயக்கம்- லோகேஷ் கனகராஜ்”.