Surya : சூர்யா அவர்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகர். அவர் சினிமாவில் மட்டுமல்ல நிறைய நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். இதுமட்டுமல்ல நிறைய மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.
தனக்கென ஒரு டிரஸ்ட் நிறுவனத்தை தொடங்கி கல்வி சம்பந்தப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் இதையெல்லாம் பல வருடங்களாக தொன்று தொட்டு செய்து வருகிறார்.
தற்போது சில வருடங்களாக நடிகர் விஜய் அவர்களும் மாணவர்களுக்கு நிறைய நல்லுதவிகளை செய்து வருகிறார். அதும் குறிப்பாக அரசியலுக்கு வருவதற்கு சில வருடங்களுக்கு முன். இதேயெல்லம் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் தான் செய்கிறார் என்ற கேள்வி அப்போதுலேர்ந்து எழுந்து வருகிறது.
சூர்யாவை போய் விஜய் கூட Compare பண்ணாதீங்க..
தற்போது சூர்யா மற்றும் விஜய் இருவருமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய உதவிகளையும், ,அனைவர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த இருவரையும் ஒப்பிட்டு பேசும்போது தற்போது சூர்யா ரசிகர்கள் கொதித்தெழுந்து விஜய்யோடு சூர்யாவை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
விஜய் கேள்விக்கு சேவை செய்வதும், சூர்யா கல்விக்கு சேவை செய்வதும் ஒன்றல்ல என்று ஆத்திரமாக பேசியுள்ளனர் சூர்யா ரசிகர்கள். சூர்யா எந்த எதிர்பார்ப்பையும் கருதாமல் இந்த உதவிகளை செய்து வருகிறார்.
ஆனால் விஜய் அப்படியில்லை. அரசியல் காழ்புணர்ச்சியோடு மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். எதிர்காலத்தில் உள்ள ஓட்டுக்களை இப்போவே அடித்தளமிட்டு வைக்கிறார். கவ்விக்கு சேவை செய்வதினால் அனைவரும் அனைவரும் காமராஜர் ஆகி விட முடியாது.
சூர்யா அவர்களுக்கு “வாழும் காமராஜர்” என்று பட்டம் கூட கொடுக்கலாம் என சூர்யா ரசிகர்கள் மட்டுமல்ல, மக்களிடையே பேச்சுக்கள் எழுந்து வருகின்றனவாம். தாராளமாக “வாழும் காமராஜர்” என சூர்யா அவர்களை அழைக்கலாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிகள் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம்.