Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் காதலித்து கல்யாணம் பண்ணவில்லை என்ற விஷயம் எதுவும் தெரியாததால் மனோகர் இவர்களை பிரிப்பதற்கு திட்டமிடுகிறார். அதனால் நல்லவர் போல் டிராமா பண்ணி நிலாவையும் சோழனையும் தன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சோழன், உஷாராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பண்ணுகிறார்.
நிலா ரூமில் சோழன் தூங்க கூடாது என்று பிளான் பண்ணிய மனோகர் முகத்தில் கரிய பூசும் விதமாக சோழன் கெத்தாக நிலாவுடன் தூங்க ஆரம்பித்தார். இதோடு நிலாவை விட்டு இவன் ஒரேயடியாக போக வேண்டும் என்று முடிவு பண்ணிய மனோகர் மறுபடியும் ஒரு சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் நிலாவின் அண்ணன் காலில் அடிபட்டு இருக்கிறது என்று நகையும் பணத்தையும் சோழனிடம் கொடுத்து ஒரு இடத்தில் போய் கொடுத்துட்டு வர வேண்டும் என்று சொல்கிறார்.
இவர்கள் சொன்னதும் சோழன் யோசித்த நிலையில் நிலா, அண்ணனால் முடியவில்லை. அதனால் நீங்க போயிட்டு வாங்க என்று சொல்கிறார். நிலா சொன்னதும் மறு பேச்சு பேசாமல் சோழன் பணத்தை எடுத்துட்டு காரில் போய்க் கொண்டிருக்கிறார். உடனே மனோகர் ஆட்கள் சூழ்ச்சி பண்ணி காரில் இருந்த பண பெட்டியை எடுக்க முயற்சி எடுக்கிறார்கள்.
இதை தெரிந்து கொண்ட சோழன் அவர்களிடம் சண்டை போட்டு பணத்தை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் கடைசியில் அந்த பணம் போக வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை என்று மச்சான் மூலம் நிலாவுக்கு தெரிகிறது. உடனே மச்சான், அவன் தான் பணத்துக்கும் நகைக்கு ஆசைப்பட்டு எடுத்துட்டு போயிருப்பான். அதுதான் போன் கூட சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது என்று மொத்த பழியையும் சோழன் மீது போடுகிறார்.
ஆனால் இதெல்லாம் இவர்களுடைய பிளானாக இருந்தாலும் சோழன் இதெல்லாம் புரிந்து கொண்டு முன்னதாகவே பிளான் பண்ணி இவர்கள் முகத்தில் கரிய பூச வேண்டும் என்று நினைத்திருப்பார். அதனால் நிச்சயம் அந்த பணத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டு மாசாக என்டரி கொடுக்கப் போகிறார். அதிலும் சோழனை காப்பாற்றும் விதமாக அய்யனார் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகளும் களம் இறங்கி இருப்பார்கள். அவர்களும் சோழன் கூட வந்து நிலா வீட்டில் தங்கப் போகிறார்கள்.