Surya : சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் சூர்யா. இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூட்டம் சொல்லவே வேண்டாம் அதிக அளவு இருக்கிறது. கமல் ரஜினிக்கு எப்படி ஃபேன்ஸ் இருக்கிறார்களோ அதை விடவும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
கஜினி திரைப்படத்தில் ரசிகர்களின் வரவேற்பு சூர்யாவுக்கு, பெரிய ஒரு இடத்தையே கொடுத்தது என்று சொல்லலாம். இது மட்டுமல்லாமல் கஜினியில் சூர்யா மற்றும் அசின் காம்பினேஷன் மக்களை கவர்ந்தது என்று சொல்லலாம். “ஒரு மாலை இள வெயில் நேரம்” பாடலில் சூர்யா தர்பூசணி சாப்பிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு திவாகர் என்ற டிக் டாக் செய்யும் நபர், தர்பூசணி சாப்பிடுவது போன்ற காமெடி செய்து அந்த வீடியோவை அப்லோட் செய்தார். ஒரே நாளில் அந்த வீடியோவிற்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது.
பிறரை சிரிக்க வைக்கிற மாதிரி வீடியோ போடும் நபர் யார் என்று கண்டுபிடிக்க இவர் ஒரு டாக்டர் என்று தெரிய வந்தது. பின்பு இந்த சீன் பயங்கர பேமஸானது. என்ப வலைத்தளத்தில் தர்பூசணி திவாகர் என்று சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டார் தலைவர்.
சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி கருப்பு திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு மற்றும் பிற தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. பாலாஜி இயக்கும் இந்த திரைப்படத்தில் தர்பூசணி சாப்பிடுவது போல், கஜினி திரைப்படத்தில் இடம் பெற்றது போலவே திரைப்படத்திலும் ஒரு போஸ்டர் வெளியானது.
இணையவாசிகள் சும்மா இருக்காமல், தர்பூசணி திவாகர் மற்றும் சூர்யா சாப்பிடும் தர்பூசணி ஸ்டைலை வைத்து நக்கலாக போஸ்ட் வெளியிட்டனர். இது வைரலமானது. இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சாந்துனு தனது வலைத்தளத்தில் இது தவறு இந்த போஸ்டை அழிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து திவாகரை பற்றி இணையவாசிகள் கழுவி கழுவி ஊற்றினார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ஒரு பேட்டி அளித்திருக்கிறார் திவாகர். ” நான் எந்த விதத்தில் சூர்யா கூட கம்பேர் பண்ணுவதில் குறைத்தலாக போயிருக்கிறேன். நான் ஒரு டாக்டர். நீங்களே சொல்லுங்கள் என்று சாந்துனு மற்றும் வெங்கட் பிரபுவை கேட்டிருக்கிறார் திவாகர்.