ஜோதிகாவால் டென்ஷனான சிவகுமார்.. கெட்ட வார்த்தை பேசிய சூர்யா, நடந்தது என்ன.?

Suriya: சிவக்குமார் குடும்பம் ரொம்பவும் பாரம்பரியமானது. சினிமாக்காரங்களா இருந்தாலும் கலாச்சாரத்தை விடாதவர் என பாராட்டும் அளவுக்கு அவர் தன் குடும்பத்தை வழி நடத்துகிறார்.

அதேபோல் சூர்யா, கார்த்தி இருவரும் பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் கூட எல்லோரிடமும் இயல்பாக பழகக்கூடியவர்கள். பத்திரிக்கையாளர்களிடமும் அவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருக்கிறது.

இருந்தும் கூட சூர்யா பத்திரிக்கையாளர்கள் மீது கோபமாக இருந்த சம்பவமும் இருக்கிறது. இதை வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கெட்ட வார்த்தை பேசிய சூர்யா

அவர் கூறியிருப்பது, சூர்யாவுக்கு நான் அண்ணன் மாதிரி. அந்த மரியாதையோடு தான் அவர் பழகுவார். ஆனால் பிரபல நாளிதழ் ஒன்று சூர்யா ஜோதிகாவின் காதல் கதையை கிசுகிசுவாக அப்போது எழுதியிருந்தது.

இதை கேள்விப்பட்ட சூர்யா அதை எழுதிய பத்திரிக்கையாளரை கெட்ட வார்த்தையால் திட்டி இருக்கிறார். இது என் காதுக்கு வந்தது. சூர்யா ஒட்டு மொத்த பத்திரிக்கையாளரையும் மோசமான வார்த்தையால் பேசியதாக சொன்னார்கள்.

உடனே சூர்யாவை பார்த்து எப்படி இந்த மாதிரி நீங்க சொல்லலாம் என கேட்டேன். அதற்கு அவர் எல்லோரையும் சொல்லவில்லை. சம்பந்தப்பட்டவரை திட்டி விட்டேன் தவறுதான்.

ஆனால் அந்த சமயத்தில் வீட்டில் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த செய்தியால் பல பிரச்சனைகள் நடந்தது. அப்பாவும் டென்ஷனாகி விட்டார் என்று தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

இதை கேட்ட பிஸ்மி ஜோதிகாவை நீங்கள் திருமணம் செய்யும் முடிவில் இருந்தால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே. எதற்காக ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இப்படி இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கிசுகிசு எழுத தான் செய்வார்கள் என அட்வைஸ் கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஜோதிகாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள சிவக்குமார் மிகவும் தயங்கினார். அதற்கு இதுதான் காரணம். தன் மகள் திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சினையால்தான் அவர் அவ்வளவு யோசித்து இருக்கிறார் என்பது இந்த செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.