முத்து மூலம் முடிவுக்கு வரும் ரோகிணியின் ரகசியம்.. திருந்தாமல் ஓவராக ஆடிய விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரதி தீபன் பிரச்சினையால் விஜயா நிம்மதி இல்லாமல் பயத்துடன் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பிரச்சனையை சரி செய்யும் விதமாக மீனா முத்து களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து சமாதானப்படுத்தும் வகையில் கல்யாணத்திற்கு ஓகே சொல்ல வைத்து விட்டார்கள்.

இதனால் ரதி தீபன் கல்யாணம் பிரச்சனை முடிந்த கையோடு மனோஜ் ரோகினி அங்கே இருந்த விஷயமும் முத்து மீனாவிற்கு தெரிந்து விட்டது. முத்து எங்க குடும்பத்திலேயே இவன் ஒருத்தன் தான் அதிகமாக படித்திருக்கிறான், அதே மாதிரி இவன் ஒருத்தனுக்கு தான் அறிவு ரொம்ப கம்மி என்று சொல்லி மனோஜ் செஞ்ச தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட சொல்கிறார்.

மனோஜ் இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று முத்துவிடம் கேட்கிறார். நீ ஏன் இங்கு வந்தாய் நான்தான் இந்த பிரச்சினையை முடித்து வைக்கிறேன் என்று சொல்லி இருந்தேனே என சொல்கிறார்.
அதற்கு மனோஜ், ரோகிணியை போட்டுக் கொடுக்கும் விதமாக இவள் தான் அம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று இந்த ஐடியாவை கொடுத்தால் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே முத்து, ரோகிணியை பார்த்து எல்லா விஷயத்தையும் புத்திசாலித்தனமாக எஸ்கேப்பாகும் நினைக்கிற நீ எப்படி இந்த விஷயத்தில் இப்படி ஒரு ஐடியாவை கொடுத்தாய் என்று கேட்கிறார். அடுத்ததாக மனோஜ், முத்துவை பார்த்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்ட பொழுது இதை சொன்னால் எனக்கு தான் அவமானம் என்று மீனாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக விஜயா, கோவிலில் மண்ணு சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே மீனாவின் அம்மா பார்த்து ஏதாவது வீட்டில் பிரச்சனையா? வீட்டில் தீர்க்க முடியாத பிரச்சினை ஏதாவது இருந்தால் தான் இப்படி மண் சோறு சாப்பிடுவாங்க என்ன பிரச்சனை என்று உண்மையான அக்கறையில் கேட்கிறார். ஆனால் விஜயா, எப்பொழுதுமே திருந்த மாட்டார் என்று சொல்வதற்கு ஏற்ப ஏன் பிரச்சனை தெரிந்தால் சந்தோஷப்படுவதற்கா, உன் வேலையை பார்த்துட்டு போ என்று திட்டி அனுப்பி விடுகிறார்.

அடுத்ததாக ரோகினி, கிருஷ்க்கு பீட்சா வாங்கிட்டு வந்து யாருக்கும் தெரியாமல் ரூமுக்கு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது தெரியாத மீனா, கிரிஷிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து தேடி பார்க்கிறார். அப்பொழுது ரோகிணி ரூமில் க்ரிஷ் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மீனா பார்த்து விடுகிறார். உடனே க்ரிஷ் நான் இதையே சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று ரோகிணி கூட இருந்து விடுகிறார்.

இந்த விஷயத்தை மீனா, முத்துவிடம் சொல்லிய பொழுது இந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. அது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பல தில்லாலங்கடி வேலையை பார்க்கிறது. அது என்ன விஷயம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் முத்து மூலம் ரோகிணியின் ரகசியம் வெளியே வர போகிறது.