Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா நித்திஷ்க்கு இடையில் வாக்குவாதம் வந்ததால் இனியா, நித்தேஷை கீழே தள்ளிவிட்டார். பிறகு அங்கிருந்து இனிய கிளம்பும் பொழுது இன்னும் நித்தீஷ் எழுந்திருக்காமல் அதே இடத்தில் இருக்கிறார் என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நித்திஷ் பக்கத்தில் சென்று இனிய, மூச்சு இருக்கிறதா என்று பார்க்கிறார்.
அப்பொழுது எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்ததை பார்த்ததும் இனியாவிற்கு நித்தேஷ் இறந்து போய்விட்டார் என்ற எண்ணம் வர ஆரம்பித்து விட்டது. உடனே பயந்து போய் வெளியே சென்று பாக்யாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லுகிறார். பாக்யா நீ அங்கே இரு நான் வருகிறேன் என்று சொல்லி இனியா இருக்கும் இடத்திற்கு வந்து நித்தீஷ்க்கு உயிர் இருக்கிறதா இல்லையா என செக் பண்ணி பார்க்கிறார்.
அப்படி பார்க்கும் பொழுது நித்தேசுக்கு உயிர் இல்லாமல் போய்விட்டது. உடனே பாக்கியா, இனியவை அங்கிருந்து கூப்பிட்டு வீட்டுக்கு வந்து அனைவரிடமும் சொல்லி விடுகிறார். இதனால் பயந்து போன இனிய புலம்ப ஆரம்பித்து விட்டார். பிறகு எல்லோரும் சமாதானமாக பேசிய நிலையில் கோபி தைரியத்துடன் இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
அப்பொழுது நித்திஷ் இறந்து போன இடத்திற்கு போலீஸ் போன நிலையில் சுதாகர், இனியா மீது தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார். இந்த விஷயத்தை செய்தி மூலம் பாக்கிய குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டு விடுகிறார்கள். உடனே இனியா நான்தான் கொலை பண்ணினேன் என்று போலீசிடம் சொல்லி சரணடைந்து விடுகிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் கோபி, இனியவை திட்டிவிட்டு நீ எதுவும் பண்ண வேண்டாம் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி பாக்கியவுடன் இனியாவை கிராமத்துக்கு அனுப்பி வைத்து விடுகிறார். அதன் பிறகு இனியவை தேடி வந்த போலீஸ் இனியா இல்லை என்றதும் கோபியை கூட்டிட்டு போய் விடுகிறார்கள். மகளைக் காப்பாற்றுவதற்காக கோபி நான் தான் நித்தேஷை கொலை பண்ணினேன் என்று சொல்லிவிடுகிறார்.
ஆனால் இதற்கு இடையில் நடந்த விஷயம் இனிய தள்ளிவிட்டு பயத்தில் வெளியே போய் நின்று பாக்யாவிடம் பேசும் பொழுது அந்த நேரத்தில் சுதாகர் வந்து நித்தேஷை கொலை பண்ணி விடுகிறார். இதனால் மொத்த பழியும் இனியா மீது விழுந்து விடுகிறது. இனியவை காப்பாற்ற வேண்டும் என்று கோபி பழியாடாக சிக்கிக் கொண்டார்.