Kaantha Teaser: துல்கர் சல்மான் இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காந்தா டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் லெஜன்ட் என்று அழைக்கப்படும் தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. துல்கருடன் இணைந்து ராணா ரகுபதி இப்படத்தை தயாரித்துள்ளார்.
பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். இந்த டீசரின் ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவின் முதல் பேய் படம் சாந்தா என தொடங்குகிறது.
காந்தா டீஸர் எப்படி இருக்கு.?
அதைத்தொடர்ந்து மூத்த இயக்குனராக சமுத்திரகனி கதாநாயகனாக துல்கர் சல்மான் எதிரதிராக இருப்பது போல் காட்டப்படுகிறது. இயக்குனருக்கும் நடிகருக்கும் இருக்கும் ஈகோ தான் படம் என்பதை பார்த்த உடனே புரிந்து கொள்ள முடிகிறது.
அதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக உருவாகும் சாந்தா காந்தாவாக மாறுவது எப்படி என காட்டப்படுகிறது. துல்கர் சல்மானின் ஹீரோ என்ற பந்தாவும் கதையை தனக்கு ஏற்றவாறு மாற்றுவது என டீசர் ஒரு படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.
அதேபோல் கருப்பு வெள்ளை காட்சிகள் முதல் கலரில் காட்டப்படும் காட்சிகள் என அனைத்து விசுவலும் சிறப்பாக இருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதை போல் செப்டம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடி வரும் ரசிகர்கள் துல்கருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.