நடிகரை காலி செய்ய நடந்த பேரம்.. பதவியை தக்க வைக்க ரகசிய மீட்டிங் போட்ட பெரும்புள்ளி 

Gossip: வரப்போகும் தேர்தலில் யார் நாற்காலியை சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. அதில் இப்போது அந்த நடிகருக்கு மக்களின் செல்வாக்கு இருக்கிறது. 

எப்படி என்றால் இதுவரை டாப் 2 இடத்தில் இருந்த கட்சிகளையே மிரட்டி பார்க்கும் அளவுக்கு இருக்கிறது நடிகரின் வளர்ச்சி. இதை இப்படியே விட்டால் முதலுக்கே மோசம் ஆகிவிடும் என அந்த கட்சிகளுக்கு ஒரு பயம் வந்துவிட்டது. 

அதனால் அவருடன் கூட்டணி அமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செல்வாக்கை இழந்த ஒரு கட்சி கூட இந்த முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் நடிகர் எதற்குமே செவி சாய்ப்பதாக இல்லை. 

நடிகரை காலி செய்ய நடந்த பேரம்

இதில் ஆளும் கட்சி பதவியை தக்க வைக்க சில பல வேலைகளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி அந்த மூன்றெழுத்து பிரபலத்துடன் வெளிப்படையான மீட்டிங் நடந்தது.

ஆனால் அதற்கு முன்பே ஒரு ரகசிய சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. அதில் வாக்குகளை மடை மாற்றுவதற்காக ஒரு திட்டம் போட்டு கணிசமான தொகையும் பேரம் பேசப்பட்டுள்ளது. 

அதன் பிறகு தான் வெளிப்படையான சந்திப்பு நடந்ததாக கூறுகின்றனர் இதன் மூலம் ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடிவில் இருக்கிறது. ஆனால் நடிகர் முரட்டுக்கட்டையாக இருப்பதால் முடிவு எண்ண வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அரசியல் வட்டாரம்.