ஷங்கர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெரிய தலைகளை வைத்து போடும் திட்டம்

Shankar : ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கும் ஷங்கர் கையில் எடுத்து இருக்கும் அஸ்திரம் தான் வேள்பாரி.

சு வெங்கடேஷனின் வேள்பாரி நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது ஷங்கரின் கனவு. ஆரம்பத்தில் இந்த கதையின் நாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

மேலும் சில காரணங்களினால் சூர்யா இந்த படத்தில் நடிக்காத நிலையில் ஷங்கர் வேறு திட்டம் போட்டு இருக்கிறார். அதாவது ரஜினி மற்றும் கமல் இதுவரையும் ஒன்றாக இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முயற்சி செய்து வருகிறாராம்.

வேள்பாரி படத்திற்கு தயாராகும் ஷங்கர்

ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் போன்ற படங்களையும், கமலை வைத்து இந்தியன் படத்தையும் ஷங்கர் இயக்கி இருக்கிறார். ஆகையால் இப்போது இரு நடிகர் இடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் சம்மதித்தால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கப்படும்.

ஆனால் ஷங்கரின் படத்தை லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க முன்வரவில்லை. ஏனென்றால் தொடர்ந்து பெரிய நஷ்டத்தை கொடுத்ததால் இந்த நிறுவனங்கள் பின்வாங்கி விட்டது.

ஆகையால் வெளிநாட்டு நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கலாம் என்று ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஷங்கர் வேள்பாரி படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →