தியேட்டரில் டல்லடித்து ஓடிடியில் கலக்கிய 5 படங்கள்.. சித்தார்த் போல் கொண்டாடத் தவறிய ஹீரோ

இவங்க சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி இருக்காங்க. இந்த படம் தியேட்டரில் பார்க்க வேண்டாம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை நிறைய பேரிடம் இருக்கிறது. அதற்கு காரணம் படம் ரிலீஸ் ஆன உடனேயே பல youtube சேனல்கள் தங்கள் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். இதனால் படம் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தியேட்டரில் கொண்டாடப்படாமல் ஓடிடியில் சக்க போடு போட்ட 5 படங்கள்

சித்தா : 2 வருடங்களுக்கு முன்பு இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அப்போது மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. S U அருண் குமார் இயக்கி படத்தின் நாயகன் சித்தார்த்தே இதை தயாரித்திருந்தார். ஓடிடி ரிலீஸ்க்கு பின்னர் தான் இந்த படத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது.

மெய்யழகன்: அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் எதார்த்தமான கிராமத்து கதையாக 96 பட புகழ் பிரேம்குமார் இதை இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் தங்களது 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் இதை தயாரித்தனர். இதுவும் ஓ டிடியில் தான் பெயர் வாங்கியது.

ஜமா: கூத்து கலைஞர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஓ டிடி ரிலீசுக்கு பின்னரே பல திரைபிரபலங்கள் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இயக்குனர் பாரி இளவழகன் இதில் ஹீரோவாக நடித்து இயக்கியிருந்தார். படம் நன்றாக இருக்கும் ஆனால் தியேட்டரில் கண்டுக்கவில்லை.

மகாராஜா: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இது அவருக்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைந்த படம் இது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை 100 கோடி வசூலிக்கும் கிளப்பில் இணைத்தார்.

லெவன்: கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படம் வெளிவந்தது தியேட்டரில் ரிலீஸான போது கிடைக்காத வரவேற்பை ஓ டி டி ரிலீஸ் பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தை வாங்கிய அமேசான் பிரைமிற்கு நல்ல லாபம் கொடுத்தது. நவீன் சந்திரா இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.சித்தார்த் போல் நல்ல திறமை இருந்தும் கதை அமையாமல் தவிக்கிறார்.