விஜய்யை நம்பி ஏமாந்தாரா வெங்கட் பிரபு? இனி ரஜினிதான் காப்பாத்தனும்

Rajini : ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நெல்சனின் ஜெயிலர் 2 படமும் லைன் அப்பில் இருக்கிறது. அடுத்ததாக ரஜினி யார் படத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதனிடையே ரஜினி தன்னுடைய பயோபிக்கை எழுதி வருகிறாராம். இந்த சூழலில் வெங்கட் பிரபு தலைவர் சந்திக்க காத்திருக்கிறார். விஜய்யின் கோட் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனோ மதராசி, பராசக்தி என பிசியாக இருக்கிறார்.

இந்த படங்களை முடித்தவுடன் சிவா வெங்கட் பிரபு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினிக்காக வெங்கட் பிரபு ஒரு கதை எழுதியுள்ளார். இதை அவரிடம் சொல்வதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கொண்டு இருக்கிறாராம்.

ரஜினிக்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு

ஏனென்றால் கோட் படத்தில் வெங்கட் பிரபுவின் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. ஆகையால் தலைவர் படத்தை எடுத்து, விட்ட பெயரை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் அடுத்தடுத்து ரஜினி படத்தை எடுத்து வெற்றி கண்டிருக்கின்றனர்.

நெல்சன் பீஸ்ட் படத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தார். அதைத்தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை எடுத்த நிலையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இப்போது அதே பாணியை பின்பற்ற நினைக்கிறார் வெங்கட் பிரபு.

ரஜினியும் விஜய் பட இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் வெங்கட் பிரபுவுக்கும் தனது படத்தை இயக்க அனுமதி கொடுக்கலாம். ஆகையால் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி-வெங்கட் பிரபு கூட்டணி அமைகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.