Coolie: நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் ட்ரைலர் வெளியானது. படத்திற்கு ஏற்கனவே எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் ட்ரைலருக்குப் பிறகு எதிர்பார்ப்பு இன்னும் எகிறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நாகார்ஜுனா, அமீர்கான், சவுபின், உபேந்திரா எல்லாம் நொடி காட்சிகளில் வந்தாலும் மிரட்டி இருக்கிறார்கள்.
ரஜினிக்காக எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக் கொடுக்காமல் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பாணியில் அதிரடியான ஆக்சன் படத்தை தயார் செய்து இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
டைம் டிராவல் கதையா?
இந்த நிலையில் கூலி படத்தின் கதை ட்ரைம் டிராவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு சில காட்சிகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஒரு காட்சியில் சத்யராஜ் ஆராய்ச்சி செய்து எதையோ கண்டுபிடிப்பது போல காட்டப்பட்டிருக்கும்.
ஒரு சேரில் மின்னல் கீற்றுகள் அடிப்பது போலவும் இருக்கும். அதே மாதிரி 20 வருஷமா ஒருத்தனை சைலன்ட் மோடில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் கையில் இருக்கும் வித்தியாசமான கடிகாரத்தை பார்ப்பார்.
அதே மாதிரி ரஜினியை பார்த்துவிட்டு சத்யராஜ் நீ ஏன் இங்க வந்த என்று கேட்பார். இந்த காட்சிகளை தான் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி டைம் ட்ராவல் படம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை லோகேஷ் கனகராஜ் தான் கொடுத்த பேட்டிகளில் படம் சயின்ஸ் பிக்சன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.